சித்த மருத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத பலரும் சித்த மருத்துவத்தைக் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.விமர்சனம் எங்களுக்கு புதிதில்லை, ஆனால் பொதுவெளியில் தற்போது அதிகமாக வரும் விமர்சனம் சித்த மருத்துவத் துறையில் எந்த ஆராய்ச்சியும் நடைபெறவில்லை, இந்தக் கொடுத்தொற்றுக் காலத்திலாவது கபசுரக் குடிநீரையோ பிற சித்த மருந்துகளையோ ஆராய்ச்சி செய்து இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அடடா சித்த மருத்துவம் மீது என்ன ஒரு அக்கறை என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?ஆனால் சித்த மருத்துவத் துறையில் என்ன நடக்கிறது என்று துறைசார் வல்லுநர்களைக் கேட்டு அறியாமலேயே தாமாகப் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று கத்துவது போலத்தான் இது!நமது நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு என்பது நவீன மருத்துவம் சார்ந்தே இயங்கிவருகிறது.
சித்த மருத்துவத்திற்கு என்று தனிப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் மைய அரசில் இருந்தாலும் அவர்களுடைய கரங்களும் ஒடுக்கப்பட்டேதான் இருக்கிறது. ஆராய்ச்சிக்கு என்று சித்த மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மிக மிகக் குறைவு! ஆராய்ச்சி என்று வரும்போது அதை நவீன மருத்துவக் கட்டமைப்பை நோக்கி தான் நம்மை இழுத்துச் செல்கிறது .
கொரோனா தொற்றின் போது இலேசான அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே சித்த மருத்துவ மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்! அவர்களிடம் மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடிந்தது!தீவிர நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவோ,ஆராய்ச்சி செய்யவோ சித்தமருத்துவத் துறையினரை அனுமதிக்கவே இல்லை .
கொரோனா முதல் அலை காலத்தில் அரசால் அமைக்கப்பட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவில் இடம்பெற்றிருந்த நவீன மருத்துவர்களின் கைதான் ஓங்கி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே,அதுவும் இந்நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.பெயரளவிற்கு ஒரே ஒரு சித்த மருத்துவர் தான் குழுவில் இடம்பெற்றிருந்தார்!
நடைமுறை சிக்கல்கள் பல தாண்டி கடந்த அலையில் மைய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் செய்யப்பட்ட ஆய்வு முடிவு வெளியீடுகள் 16 இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பைச் சொடுக்கித் தெரிந்து கொள்ளலாம்.
http://siddhacouncil.com/covid-19-publications/இவையன்றி மாநில அரசு சித்த மருத்துவர்கள் பாளையங்கோட்டை, சென்னையில் செய்த ஆய்வு முடிவுகளும். இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
https://www.ijnpnd.com/article.asp… https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7826002/ The selected Siddha regimen for COVID-19 study comprised Kabasura kudineer (KSK) and Adathodai manapagu (AM), indicated for fever and respiratory ailments [3] whereas Vasantha kusumakaram mathirai (VKM) and Thippili Rasayanam (TR) were indicated for respiratory problems [4].
சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சியே நடைபெறவில்லை என்று புலம்பும் அதிமேதாவிகள் மனமிருந்தால் படித்துப் பாருங்கள்!
நன்றி:- சித்தமருத்துவர் அருண்