கிபி 1794..மூன்றாம் மைசூர் போர் திப்பு சுல்தானுக்கும், ப்ரிட்டிஷாருக்கும் இடையே நடைபெறுகிறது. அதில் ப்ரிட்டிஷ் ராணுவத்துக்கு உணவுப்பொருளை ஏற்றிசென்ற வண்டி ஒன்றை மறித்து பிடிக்கிறார்கள் மைசூர் படையினர். அதை ஓட்டி வந்தது கொசாஜி எனும் எளிய மராத்திய வண்டிக்காரர். சரி என அவரது மூக்கை அரிய உத்தரவிடுகிறார் திப்பு. மூக்கு அறுபட்ட கொசாஜி போர் முடிந்ததும் விடுதலை செய்யபடுகிறார்.
அவருக்கு சிகிச்சை அளிக்க ஒரு ப்ரிட்டிஷ் மருத்துவர் முன்வருகிறார். ஆனால் உங்கள் சிகிச்சை எல்லாம் வேண்டாம் என்னை குமார் வைத்தியரிடம் கூட்டி செல்லுங்கள் என்கிறார் கொசாஜி.” இது என்ன நவீன மருத்துவத்தை விட்டுவிட்டு நாட்டு வைத்தியம்” என திட்டுகிறார்கள் ப்ரிட்டிஷார்.”குமார் வைத்தியர் என் அறுந்த மூக்கை மீண்டும் பொருத்துவார்” என்றதும் அவர்கள் மேலும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் சரி என கூட்டிபோகிறார்கள்.
அந்த குமார் வைத்தியர் செங்கல் சூளை வைத்து நடத்தி வருபவர். அந்த சூளைக்காரர் கோசாஜியின் நெற்றியில் இருந்து ஒரு பட்டை தோலை உரித்து எடுத்து மூக்கில் வைத்து புதியதாக மூக்கை வளரவைத்து விடுகிறார். நெற்றித்தோலும் வளர்ந்து விடுகிறது.இதை அருகே இருந்து பார்த்த ப்ரிட்டிஷ் டாக்டருக்கு அதிசயம் தாங்காமல் நடந்த சம்பவத்தை ஓவியமாக தீட்டி ப்ரிட்டனுக்கு அனுப்புகிறார்.
அதை பார்த்த ஜோசப் காண்டான்டைன் கார்பே எனும் ஆங்கில மருத்துவர் லண்டனிலிருந்து கிளம்பி வந்து குமார் வைத்தியரை சந்தித்து பல ஆண்டுகள் தங்கி இருந்து இந்த சிகிச்சை முறையை கற்றுக்கொண்டு திரும்புகிறார்.லண்டன் சென்று மேலை உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரியை 1816ம் ஆண்டு செய்கிறார். அது கார்பே ஆபரேஷன் என அப்போது அழைக்கப்படுகிறது.
குமார் வைத்தியருக்கு எப்படி பிளாச்டிக் சர்ஜரி தெரியும்?சுஷ்ருதர் எனும் செங்கல் சூளை வைத்திருந்த எளியவர் ஒருவர் இதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே மிக தெளிவாக எப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது என எழுதி வைத்திருந்திருக்கிறார். சுஷ்ருத சம்ஹிதா எனும் இந்த நூல் இன்றும் அந்த விவரங்களை கொண்டுள்ளது
(பிளாச்டிக் சர்ஜரி என அழைக்காப்பட்டாலும் பிலாஸ்டிக்கை ஒட்டி செய்யபடும் சர்ஜரி அல்ல இது :ஆனால் அதை பாரம்பரியமாக செய்துவந்தவர்கள் செங்கல் சூளை வைத்திருந்தவர்கள் எனத்தான் தெரிகிறது.
ப்ரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள கொசாஜி ஓவியமாமான படம்…
நன்றி :- நியாண்டர் செல்வம்!