நம் குழந்தைகளுக்கு குர்ஆன் பற்றிய அடிப்படை புரிதல் தேவை, குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் கருத்தியல் கோட்பாடுகள் குறித்த தெளிவான கல்வித்திட்டம் தேவை என கூறும்பொழுதெல்லாம் ஒருசில ஆங்கிலக்கல்வி மோகம் படைத்தவர்கள்…நம்மை ஏளனம் செய்வது அல்லது உலக வாழ்க்கைக்கான அபரிமிதமான வருமானத்தை தேட குர்ஆன் கல்வி ஒருபோதும் உதவாது என பேசும் மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள்.
அதாவது தங்களது நிலையிலேயே அடுத்தவரையும் வழிநடத்தும் ஒரு பொத்தாம்பொது சமூகமாக இருப்பார்கள். குர்ஆனின் சாராம்சத்தில் உருவான அவர்களது கல்வித்திட்டமானது, அவர்களில் ஒருவரான மெக்காலே நமக்கு வகுத்த கல்வித்திட்டத்தை விட தரமானதாக இருப்பதை எப்போது உணரப்போகிறர்கள். கல்வி என்று வந்தால் அவர்கள் பாடங்களை விட நமது பாடங்கள் மதிப்பற்றவையாக, வேறு வேறாக இருப்பதற்கான காரணமென்ன? என்பதை சிந்திக்கமாட்டார்கள்.
பத்தாம் நூற்றாண்டு முதல் குர்ஆன் கல்வி எப்படியெல்லாம் பரவி மேற்குலகில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை கவனியுங்கள். முதலில் அரபு மொழி குர்ஆனை அரபிலிருந்து அந்நியமான பெர்ஷிய மொழிக்கு மாற்றமடைந்த்து சல்மான் பார்ஸி எனும் நபித்தோழரால் தான்…அதற்கு பிறகு அரபு -லத்தீன் குர்ஆன் செய்த மிகப்பெரும் தாக்கங்களே இப்போது நாம் நவீன உலகில் அனுபவித்துக்கொண்டிருக்கும் அறிவியல் விஞ்ஞான அதிசயங்கள் அத்தனையும்.
குர்ஆனை மொழிப்பெயர்த்த அலெக்ஸாண்டர் ரோஸ் (1590-1654) ஸ்காட்லாந்திய மதபோதகரும், பிரிட்டிஷ் மன்னர் முதலாம் சார்லஸின் அந்தரங்க பூசாரியும் ஆவார். 1647ல் குர்ஆனை மொழிமாற்றுகிறார். மன்னர் சார்லஸின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் குர்ஆனை மொழிப்பெயர்த்தார் என அவரது வாழ்க்கை குறிப்பு கூறுகிறது
இறப்பதற்கு சற்று நாட்களுக்கு முன் தனது தோழர் ஹென்லி மற்றும் மருமகன் வில்லியம் ரோஸிடம் தனது புத்தகங்களை விட்டுச்செல்கிறார்,
குர்ஆனை எழுதிய பிறகு “அர்கானா மைக்ரோகாஸ்மி” என்ற “மனித உடலியலில் ஒளிந்திருக்கும் ரகசியம்” என்ற புத்தகத்தை 1651ல் எழுதுகிறார். அதில் அரிஸ்டாடில் மற்றும் கேலன் ஆகிய கிரேக்க தத்துவ மேதைகள் எழுதிய மனித உடலியல் புத்தகத்தை மேற்கோளிட்டும் தாமஸ் பிரௌனி எழுதிய தவறான புத்தகத்தை சுட்டிக்காட்டியும் அதை எழுதுகிறார். அரிஸ்டாடில் எழுதிய மனித உடலியலுக்கும் அண்டவெளிக்கும் உள்ள தொடர்பினை குறித்து அலெக்ஸாண்டர் விரிவாக எழுதுகிறார்.
ரோஸுக்கு பிறகு அதே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ் சேல் (1697-1736) என்பவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். கிபி. 1734ல் குர்ஆனை மொழிமாற்றம் செய்கிறார்., இது 14ம் நூற்றாண்டை சேர்ந்த இஸ்லாமிய பொற்கால விஞ்ஞானிகளில் ஒருவரான அல்பதாவி அவர்களது கையெழுத்துப்பிரதிகளை அடிப்படையாக கொண்டு மொழிமாற்றம்செய்யப்படுகிறது.
குர்ஆனுக்கு விளக்கவுரையாக அல்பதாவி (இறப்பு 1319) எழுதிய “The Lights of Revelation and the Secrets of Interpretation” என்கிற புத்தகம், இந்த புத்தகம் இங்கிலாந்தில் இருக்கும் ஆஸ்டின் துறவிகளுக்கான டச்சு சர்ச்சில் பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது. ஐரோப்பாவிலேயே மிகவும் புராதன நூலகமான போதலைன் லைப்ரரியிலும் இவரது நூல் உள்ளது. குர்ஆன் தொடர்பாக மட்டுமே சுமார் ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார் சேல். அது குர்ஆனின் கூறப்பட்ட உடலியல், விண்வெளி,ஈர்ப்புவிசை, மார்க்கச்சட்டங்கள் மற்றும் குர்ஆனுடைய மற்ற மதங்கள் மீதான பார்வை ஆகிய ஐந்து துறைகள் சார்ந்தவற்றை குறித்த விரிவான விளக்கங்களாகும். முஹம்மது என்பவர் தன்னை தகுதிக்கு மீறிய அறிவாளியாக காட்டிக்கொள்ள முயற்சித்துள்ளார் என எழுதியிருக்கும் சேல் தான், குர்ஆன் குடும்பவியல் மற்றும் பொருளாதார சட்டங்களை காப்பியடித்து தங்களது மதம் சார்ந்த சட்டதிட்டங்களை உருவாக்கியவர்.
லியொனார்டோ டா வின்சி 1452-1519 இத்தாலி பல்துறை வித்தகர், இவர் வரைந்த உடலியல் மற்றும் மனித கருவின் வடிவங்கள் அனைத்தும் குர்ஆனின் வார்த்தைகளை உள்வாங்கி வரையப்பட்டதே ஆகும். லியொனார்டோ ஒரு இத்தாலியராக இருந்தாலும் அவர் தனக்கு தேவையான விபரங்களை தேடி நாடு நாடாக அலைந்தவர் என்றும், ஊருக்கு வெளியே இருக்கும் கல்லறைத்தோட்டங்களிலேயே அதிகம் அலைந்துகொண்டிருந்தவர் என்றும், புதிதாக புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து உடலை பிளந்து அதன் குறுக்குவெட்டு தோற்றத்தை கண்ணால் பார்த்து மனித உடலியல் பாகங்களை வரைந்த காரணத்திற்காக அவரது மாணவர்கள் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு அரசுகளிடம் தண்டனை அனுபவித்தவர் என அவரது வாழ்க்கை குறிப்பு கூறுகிறது.
பழங்கால தத்துவ ஞானங்களும் அறிவியல் அறிவும் கிரேக்கத்தில் கிடைக்குமெனில் அவர் தரவுகளை தேடி மற்ற நாட்டு நூலகங்களுக்கும் நினைவாலயங்களுக்கும் சர்ச்சுகளுக்கும் பிரயாணித்து அறிவை தேட வேண்டிய தேவை என்ன வந்தது? மாறாக அவருக்கு இஸ்லாமிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தேவைப்பட்டது..அதனை தமக்கு தெரிந்த மொழியில் படிக்க அவருக்கு பிரெஞ்சு, ஸ்பெயின் நாடுகளுக்கு பிரயாணிப்பது அவசியப்பட்டது. மற்ற நூல்களை போலவே அவர் குர்ஆனில் இருந்து எழுதப்பட்ட பல்துறை விளக்க நூல்களை அவர் கற்றிருந்தார்..அவர் கற்ற தத்துவங்களை தனது ஈடுயிணையற்ற ஓவியங்கள் மூலம் பிரதிபலித்தார். இன்னும் கூட லியனார்டோவின் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை பற்றி மனிதகுலம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை.
ஐசக் நியூட்டன் 1643 – 1727 (ஐசக் நீயூட்டன் மற்றும் அலெக்ஸாண்டர் ரோஸ் ஆகிய இவர்களின் ஒற்றுமை யாதெனில் இருவரும் டிரினிடி கல்லூரியில் படித்தவர்கள், தங்களது ஆக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கருத்தியல் கோட்பாடுகளை அந்த கல்லூரிக்கு பாடத்திட்டமாய் வைத்தவர்கள், தியாலஜி அதாவது தியோ என்றால் கிரேக்க மொழியில் தெய்வம் என்று அர்த்தம், லாஜிக் என்பது இயல் அல்லது கோட்பாடு என அர்த்தம், கடவுள்கோட்பாடு குறித்த பயில்வதே தியோலஜி எனப்படுகிறது… கிறுஸ்தவர்கள் முன்னர் படித்த கடவுள் கோட்பாடுகளுக்கும் இஸ்லாமிய கடவுள் கோட்பாட்டு தத்துவங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை பற்றி இவர்கள் இருவரும் விரிவாக்கம் எழுதியுள்ளனர், அதற்கு உதவியது குர்ஆன் தான் ) ஈர்ப்புவிதி பற்றி கண்டறிந்த பிறகு விண்வெளியில் இருக்கும் கிரகங்கள் அனைத்தும் ஒரே ஈர்ப்புவிசையில் சுழல்கிறது என்றும் பூமி கோளவடிவமானது என்றும் கூறினார் நியூட்டன்.
அன்ட்ரே டி ரையர் (1580-1660), இவர் லத்தீன் மொழி குர்ஆனை முதன்முதலில் பிரெஞ்சில் மொழி பெயர்க்கிறார். அதற்கு முஹம்மதின் குர்ஆன்…பொய்களும் போலி தூதுத்துவமும் என்றே பெயர் வைக்கிறார். கிபி. 1143ல் லத்தீன் குர்ஆன் ராபர்ட் ஆப் கெட்டன் மற்றும் ஹெர்மன் ஆப் கரீந்தியா ஆகியோரது கூட்டுத்தயாரிப்பில் பீட்டர் தி வெனரபிள் என்பவரால் வழிகாட்டப்பட்டு மொழிமாற்றி எழுதப்படுகிறது. இதில் பீட்டர் தி வெனரபிள் என்பவரது பிறப்பு இறப்பு பற்றிய எந்த குறிப்பும் இல்லை, ஆனால் அவர் கிறுஸ்தவ மதகுருவாக இல்லாமல் பொதுவான கடவுள் கொள்கையுடைய ஒரு துறவியாக இருந்துள்ளார்.
இருபதாம் நூற்றாண்டுக்கு முன் குர்ஆனை மொழிப்பெயர்த்த அத்தனை வெளிநாட்டவரும் நபிகள் நாயகம் முஹம்மது ஸல் அவர்களை தூற்றாதவர்கள் இல்லை.. முஹம்மது ஒரு பொய்யர், போலி தீர்க்கதரிசி, தன்னை அறிவாளியாக காட்டிக்கொண்ட செப்படிவித்தைக்காரர் என்றே இகழ்ந்து வந்துள்ளனர். குர்ஆனை இயற்றியது முஹம்மது தான் என அடிக்கொரு முறை எழுதி வைத்தவர்கள், ஆனால் அவர்களுக்கு குர்ஆனுடைய கருத்து மட்டும் ஏனோ எல்லா காலத்திலும் தேவைப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தூதுச்செய்திகளை ஆராயந்துள்ளனர். ஒருநாளும் இந்த குர்ஆன் தீயவற்றை போதிக்கிறது என்கிற காரணத்தால் தூக்கியெறியப்படவுமில்லை, இதில் மதிப்பான தகவல் எதுவுமில்லை என கைவிடப்படவுமில்லை. முஸ்லிம்களை விடவும் கிறுஸ்தவர்களும் யூதர்களுமே குர்ஆனை அதிகம் படித்து அதன் விளக்கத்தை தெளிவாக அறிந்து கொண்டவர்கள் எனும் அளவிற்கு அவர்களது குர்ஆன் ஆய்வு நம்மைவிட மிஞ்சி நிற்கிறது.
இஸ்லாமிய பொற்காலத்து விஞ்ஞானிகளை உருவாக்கிய பக்தாதின் பைத்துல் ஹிக்மா பற்றி உங்களுக்கு தெரியும்…அதே பைத்துல் ஹிக்மாவில் அரபு அறிஞர்களால் மற்ற நாட்டு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட அறிவுஞான நூல்களையும் அரபு விஞ்ஞானிகளின் கைப்பிரதிகளையும் ஸ்பெயினில் கிபி.1234ல் உருவான சேவில்லே கதீட்ரல் பல்கலையில் பத்திரமாக சேமிப்பது பற்றியும் , அரபு மற்றும் துருக்கி நாட்டு அறிவாளிகளின் புத்தகங்கள் பலவற்றை ஸ்பெயினின் டொலிடோ பல்கலையில் பாதுகாப்பது பற்றியும் நமக்கு தெரியுமா? இஸ்லாம் தீயது என தூற்றிக்கொண்டே தான் அவர்கள் நம்மிடமிருந்து அறிவுக்கொள்ளை நடத்திக்கொண்டிருக்கிறர்கள் பன்னெடுங்காலமாக…
நன்றி:- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)