ஹீமோகுளோபின் அளவை அதிரடியாக உயர்த்திட…

by Mohamed Anas

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடிவதில்லை.

உடலில் ஹீமோகுளோபின் குறையும்போது உடல் நலம் கெடுகிறது.
ஆண்களுக்கு14–18 அளவும்
பெண்களுக்கு 12–16ம் ஹீமோகுளோபின் அளவு இருக்கவேண்டும்.ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு நாட்டுமருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் வாங்கி, அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

1-வது நாள் 1, 1, 1, = 3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

இவ்வாறு ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்து பாருங்கள். தேவையானால் மீண்டும் ஒரு முறை பட்டியலின்படி செய்து பாருங்கள்.

இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.உடலில் உற்சாகம் பெருகும். வளமோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.

குறைந்த செலவில் எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிரடியாக அதிகரிக்கலாம்

நன்றி:- நாட்டு மருந்து முகநூல் குழு

Source:- https://www.facebook.com/groups/NaattuMarunthu/permalink/3057747654470410/

Related Posts