இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்து பின்பு வரிவிதிப்புகள் மூலமும் வட்டியின் மூலமும் இந்திய பெருநில ராஜாக்களின் வளங்களை சுரண்டியும், சாமான்ய மனிதர்களின் உழைப்பினைச்சுரண்டி அடிமைப்படுத்தியும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட அதே பிரிட்டிஷ் அரசு, கண்டம் தாண்டி சென்று அமெரிக்காவிலும் தனது கைவரிசையை காட்டி வந்தது. மொத்தம் பதிமூன்று காலணி மாகாணங்களாக அமெரிக்காவை பிரித்து வைத்து தனது ஆதிக்கத்தை செலுத்திய பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பூர்வீக அமெரிக்கர்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென போராட துவங்கினர். கிபி.1600 வாக்கில் தொடங்கிய பிரிட்டிஷ் ஆதிக்கம், நடந்துகொண்டிருந்த காலத்திலேயே பிரான்சும் அமெரிக்காவின் பல பகுதிகளை ய தன்வசப்படுத்திக்கொண்டு சுரண்டிக்கொண்டிருந்தது.
இதனை விரைவிலேயே உணர்ந்துகொண்ட அமெரிக்க பூர்வகுடி செவ்விந்தியர்கள் பிரெஞ்சுப்படையினரோடு போரிட்டனர். அது கிபி.1754 முதல் தொடங்கி கிபி.1763 முடிவுக்கு வந்தபிறகு…கிபி.1770 பாஸ்டனில் சிறை படுகொலைகளை நிகழ்த்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கர்களில் இருந்த பல இனத்தவரும் ஒன்று கூடி சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தனர். கிபி.1775 முதல் தீவிரமாக நடந்த இரு படையினருக்குமான போர் நிறுத்தப்படாமல் கிபி.1783வரை தொடர்ந்து நடைபெற்றது என கூறலாம்.
ஆனால் வடமெரிக்காவின் வடக்கு பகுதி மாகாணங்கள் மற்றும் 12 காலணி மண்டலங்களின் தலைவர்கள் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிரான காங்கிரஸ் ( இது continental congress எனப்பட்டது, பென்சில்வேனியா மற்றும் பிலடெல்பியா மாகாணத்தில் நடைபெற்றது) ஒன்றினை அமைத்து… கிபி.1776, ஜூலை 4ல் தங்களை சுதந்திர தேசமாக அறிவித்துக்கொண்டனர் . பிரிட்டிஷாருக்கு இனி இங்கே இடமில்லை என கூறி முதலில் அமெரிக்காவின் வடக்கு பகுதி சுதந்திர நாடாக அறிமுகமானது.
அமெரிக்க ஒரு சுதந்திர நாடு என உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்றால் உலகில் வலிமை மிகுந்த நாடு அமெரிக்காவை தனி நாடாக அங்கீகரித்து அமைதி மற்றும் வணிகத்திற்கான துறைமுக ஒப்பந்தங்கள் போடப்படவேண்டும். அப்போதைய காலகட்டத்தில் அந்த பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ தான் அப்படியொரு உலக அந்தஸ்த்தான நிலையில் இருந்தது, எனவே அமெரிக்க தூதர்கள் நேரடியாக மொராக்கோ – அமெரிக்க துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தங்கள் நிறைவேற்ற மொராக்கோ மன்னர் சுல்தான் முகம்மது பின் அப்துல்லாஹ் அல்’காதிப் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அட்லாண்டிக்கில் பயணமாகும் சரக்கு கப்பல்களை வழிமறித்து கடற்கொள்ளையில் ஈடூபடும் கொள்ளையர்களை அடக்கி பாதுகாப்புத்தரவும், இரு நாடுகளும் நட்புணர்வோடு வியாபாரத்தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவுமான ஒப்பந்தங்கள், மொராக்கோ சுல்தான் மூன்றாம் முகம்மது ,ஜான் ஆடம்ஸ் மற்றும் தாமஸ் ஜெஃபர்ஸன் ஆகியோவர்களால் கையெழுத்தாகின. இதனையடுத்து கிபி.1777 டிசம்பர் 20 , அன்று… அமெரிக்க ஒரு தனி தேசம் என கூறி உலக அறிக்கை வெளியிட்டு அங்கீகரித்தது மொராக்கோ.
உலகில் முதல்முதலில் அமெரிக்க ஒரு தனி தேசம் என ஏற்றுக்கொண்ட முதல் நாடும், முதல் ஆப்பிரிக்க நாடும், முதல் இஸ்லாமிய நாடும் மொராக்கோ என்பதும் அதை அங்கீகரித்து உறுதிப்படுத்திய சுல்தான் மூன்றாம் முகம்மதுவும் இன்றளவும் அமெரிக்க குடியரசால் நன்றியோடு நினைவுக்கூறப்படுகிறார்.
சுல்தான் முகம்மது பின் அப்துல்லாஹ் அல்’காதிப் (சுருக்கமாக முகம்மது lll என கூறுகிறார்கள்) ஒரு அலவிய்யீன் வம்சத்தை சார்ந்த மன்னர் ஆவார். மொராக்கோவின் பூர்வகுடி மக்களில் அலவீய்யீன்களும் , மாநபி ரசூலுல்லாஹ் ஸல் அவர்களின் நேரடி வழித்தோன்றல்கள் என அறிவித்துக்கொண்ட அரபு சரீஃபியர்களுக்கும் சம உரிமை உண்டு.
சுல்தான் மூன்றாம் முகம்மது அவர்களின் தந்தை சுல்தான் அப்துல்லாஹ் lV அவர்கள் மொராக்கோவின் மன்னராக கிபி.1745–1757 வரை இருந்தவர்.அவருக்கு பிறகு மகன் முகம்மதுவை மன்னராக்கினார். சுல்தான் மூன்றாம் முகம்மது காலத்தில் சுற்றியிருக்கும் பல நாடுகளுடனும், ஐரோப்பிய நாடுகளும் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்பட காரணமாயிருந்தார். அமெரிக்க மட்டுமல்லாது , பல ஐரோப்பிய நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைகடல் வழித்தடத்தில் திரியும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர், அவர்களது சரக்கு போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றியவர். ஆங்கிலேயரும் யூதரும் வந்து மொராக்கோவில் வியாபாரம் செய்துகொள்ள அஸ்’ஸவிரா நகரினை உருவாக்கிக்கொடுத்திருந்தார்.
ஐரோப்பிய கட்டிடக்கலையில் அதீத ஆர்வமுடைய அவருக்கு மொராக்கோவினை அதன் வடிவங்களில் மாற்றியமைத்தார். காசாபிளாங்கா மற்றும் மராக்கேஷ் ஆகிய நகரங்களை பிரெஞ்சு கட்டிடக்கலை நிபுணர் தியோடர் கோர்னட் மற்றும் ஆங்கில கட்டிடக்கலை நிபுணர் அஹமத் அல்’இங்கிலிஸி ஆகிய பெரும் நிபுணர்களை வரவழைத்து புதுப்பித்து மறுநிர்மாணம் செய்தார்.
மொராக்கோ-அமெரிக்க நட்புணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் இதுவரை கொடுத்துவந்த பேராதரவினை பாராட்டியும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்கடன் பாராட்டுப்பத்திரம் அனுப்பிக்கொடுத்தார். இதேபோல கிபி.1767ல் பிரான்சும் தங்களது நாட்டு கப்பல் போக்குவரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் என்ன காரணத்தினாலோ நட்புணர்வு ஒப்பந்தங்களை மீறிய அமெரிக்காவுக்கு மீண்டும் உதவிகள் புரியப்படமாட்டாது என மொராக்கோ அறிவித்துவிட்டது. கிபி.1836ல் ஒப்பந்த புதுப்பித்தலுக்கு வந்த அமெரிக்காவை, “ஒப்பந்த மதிப்புகளை மீறிய அமெரிக்க கப்பல்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இங்கு இடமில்லை, இனியொரு முறை இந்தப்பக்கம் வந்தால் நீங்கள் அனுபவிக்கப்போகும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல” எனக்கூறி நட்பினை முறித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை அமெரிக்க கொடுத்த ஒப்பந்த பாத்திரங்கள் இன்னும் கையெழுத்திடப்படாமல் நிலுவையில் உள்ளது. அதற்கடுத்து அமைந்த மொராக்கோ அரசுகளும் அமெரிக்காவை ஏறிட்டு பார்க்கவில்லை. வரலாற்றின் நீண்டநாளாக கையெழுத்திடப்படாமல் காத்திருக்கும் ஒப்பந்தம் இது என வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் மொராகாவின் டான்ஜியர் நகரத்தில் இருந்து அமெரிக்க புராதன தூதரகம் இன்று உள்ளது. அமெரிக்காவை தாண்டி அதற்கு இருக்கும் ஒரே வெளிநாட்டு உடைமை என்றால் அது அந்த தூதரகம் தான். இப்போது அது மியூசியமாக செயல்படுகிறது.
இஸ்லாமிய தேசங்கள் இல்லாது யாதொரு தேசமும் நில்லாது.
நன்றி:- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)