ஜாபிர் இப்னு ஹைய்யான் (721-815)

by Mohamed Anas

அபு மூஸா ஜாபிர் இப்னு ஹைய்யான் எனும் பாரசீக விஞ்ஞானி பிறந்தது தற்போதைய இரான் நாட்டின் கொரசான் மாகாணத்தில் உள்ள துஸ் நகரத்தில், அப்போது உமைய்யத் கலிஃபாக்கள் ஆட்சி நடைபெற்றுவந்தது.  பக்தாத்,எமன் மற்றும் கூஃபா நகரங்களில் தம் வாழ்க்கையை தொடர்ந்த அவரது ஆன்மீக குரு சூஃபி ஞானி ஜாபர் இப்னு முஹம்மது அஸ்’ஸாதீக் ஆவார். இவர் ஷியாக்களின் ஆறாவது இமாம் ஆவார்.

ஷியா பிரிவில் சென்றுவிட்டாலும் இவர் நபிகள் நாயகம் அவர்களின் குரைஷி குலத்தில் பிறந்தவர்கள் தான், இவரது தந்தை முஹம்மது அல் ஃபக்ரு , இமாம் அலியின் நேரடி வாரிசாவார். . ஹனஃபி மற்றும் மாலிகி இமாம்களின் குருவும் இவர் தான். சூபிய தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இவருக்கு பல மாணவர்கள் உண்டு அவர்களில் ஒருவர் தான் இப்னு ஹைய்யான்.

இப்னு ஹைய்யான் பல்கலையில் வல்லுனர் ஆவார். “அரபுலகின் ரசாயன இயலின் தந்தை” என போற்றப்படும் இவர் தான் சல்ஃபயூரிக் அமிலத்தை (அல்ஸாஜ் எண்ணெய் என பெயரிட்டார் ) கண்டுபிடித்தது. இவரது படைப்புகளை 3,000 பக்கங்கள் கொண்ட தொகுப்பு புத்தகமாக அரபுலகம் பாதுகாத்து வருகிறது.

ரசாயனமும் ரசவாதமும் இவரது விருப்பமான துறைகளாக இருந்த போதிலும் வானவியலாளர்., கிரகசஞ்சார நிபுணர், பொறியியலாளர், புவியியலாளர், இயற்பியல், மருத்துவம் , மருந்துகள் தயாரிக்கும் வைத்தியர் மற்றும் தத்துவஞானி என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர்.

மாங்கனீஸ் டை ஆக்சைடு போன்ற சிறிய அளவிலான உலோக ஆக்ஸைடுகளை கண்ணாடி படிமங்களுடன் சேர்த்து புதுவிதமான கலைப்பொருள் மூலக்கூற்றினை தயாரித்தார். கண்ணாடி பொருட்களில் உலோக கலவை கலந்து முதன்முதலில் கலைப்பொருட்களை உருவாக்கினார். கண்ணாடி பொருட்களில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட பலவகை நிறங்களை  பூசி புதுவிதமான நிறங்களுடைய கண்ணாடிகளை தயாரித்தார் , கோபால்ட் நீலம் எனும் ஒருவகை கலர் கண்ணாடிகளை தயாரித்தார்

அது அப்போதைய நவீன கண்டுபிடிப்பாக அறியப்பட்டு கோவில்களில், தேவாலயங்களில்,பள்ளிவாசல்களில் வாசல்கள், ஜன்னல்கள் அமைக்க பெரிதும் பயன்பட்டது.  நைட்ரிக் ஆசிட் எனும் நிறமற்ற அமிலத்தை கண்டுபிடித்த இப்னு ஹைய்யான் அந்த அமிலத்தை கொண்டு விவசாய உரங்களை தயாரித்தார் வெடி மருந்துகளில் பயன்படும் நைட்ரோகிளிசரினையும் கண்டறிந்தார்.

பொதுவாக அப்போது நைட்ரிக் அமிலமானது நிறமிகள் தயாரிக்க பெரிதும் பயன்பட்டது. தாம் அறிந்த கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு மூலம் இன்றளவும் வேதியில் கூடங்களில் பயன்படும் சோதனைக்குழாய் முதல் மற்றுள்ள ராட்சத பீக்கர்கள் வரை தயாரித்து வைத்தவர்.

வேதியியலின் தந்தை என போற்றப்படும் ஜாபிர் இப்னு ஹைய்யான் அவர்களின் பெயரில் நிறைய போலி மனிதர்கள் உலா வந்த காரணத்தால் ஜாபிர் எனும் பாரசீக பெயரை லத்தீனில் “கெபர்” என உச்சரித்து அவரது தரவுகளை ஏற்றுக்கொண்டனர் ஐரோப்பியர்கள். இப்னு ஹைய்யானுக்கு  ஜாபர் அஸ்’ஸாதிக் போலவே மற்றுமொரு குருவாக இருந்தவர் சூபி ஞானி ஹர்பி அல் ஹிம்யாரி ஆவார். இவர்களிடம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் பயின்ற இப்னு ஹைய்யான், தத்துவார்த்த கருத்துக்களையும் இவர்களிடம் தான் பயின்றார்.

சல்பியூரிக் அமிலம் தவிர 98 வேறு விதமான ரசாயனங்களை இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரித்து வைத்தார். தற்கால வேதியியல் சோதனை கூடங்களில் பயன்பட்டு வரும் பல உபகரணங்கள் இப்னு ஹைய்யான் தயாரித்ததே ஆகும். துல் நுன்- அல் மிஸ்ரி , அல் கிந்தி ஆகியோருக்கு குருவாக விளங்கிய இப்னு ஹைய்யான் கிதாப் அல் கிம்யா எனும் முழுநீள வேதி ரசவாத புத்தகத்தை இயற்றியுள்ளார்.

அல்கெமி – Alchemy எனும் எனும் வார்த்தையில் வரும் கெமி என்பது புராதன பாரசீக வார்த்தையான கிமியா – Kimiya எனும் சொல்லில் இருந்து வந்தது. இது பழங்கால எகிப்து வார்த்தையான கெம் – Kim எனும் சொல்லின் வடிவமாகும். கிமியா என்றால் கருப்பு என்று அர்த்தம். கெமி என்ற பார்சி வார்த்தை தான் ஆங்கிலத்தில் கெமிஸ்ட்ரி ஆனது.

சூபி ஞானிகள் தங்களது தத்துவ ஞான ஒளி இருளின் பாகத்தில் இருந்து தான் கிடைப்பதாக நம்பினார்கள். எனவே தங்களது ஆராய்ச்சி மற்றும் ரசவாதங்களை கருமை படர்ந்த இருளில் தான் பயின்றார்கள். கிதாப் அல் சபீன் எனும் மற்றுமொரு நூலையும் இயற்றினார். Book of Kingdom, Book of Balance and Book of Eastern Mercury எனும் இயற்பியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது புத்தகங்களை கிபி.988ல் வாழ்ந்த பாரசீக வரலாற்று ஆய்வாளரான இப்னு அல் நதீம் தமது கிதாப் அல் ஃபிஹ்ரிஸ்த்தில் பதிவாக்கியுள்ளார்.

1904-1944 வரை வாழ்ந்த பால் க்ராஸ் எனும் வரலாற்றாய்வாளர் இப்னு ஹைய்யான் பாரசீகத்தின் எந்த பழங்குடியை சேர்ந்தவர் என்பதில் சந்தேகமுள்ளதாகவும் , அல்தூஸி, அல்கூபி, அல்அஸ்தி, அஸூபி என பலவாறான பழங்குடிகளின் பெயரால் பலரும் ஒரே பெயரில் இருப்பதால் இவர்தான் ஜாபிர் இப்னு ஹைய்யான் என்பதில் ஐரோப்பிய உலகில் சந்தேகம் உலவுவதாக கூறியுள்ளார்.

காரணம் ஒரே மனிதரால் இத்தனை துறைகளில் நிபுணத்துவம் பெற எப்படி முடியும் என்பதே. ஆனால் குர்ஆன் என்பது சர்வஞான போதகம் என்பதை படித்தாலொழிய அறிய முடியாது.  சந்தேகம் ஒருபக்கம் உலவினாலும் நவீன மருத்துவத்தில் இப்னு ஹைய்யான் உருவாக்கிய வேதிப்பொருட்களை கலக்காமல் இல்லை. இப்னு ஹைய்யான் கண்டுபிடித்து, வகைப்படுத்தி,பெயரிட்டு வைத்த வேதிப்பொருள் அனைத்தும் இன்றளவும் மேற்குலக மருத்துவத்திறையினரால் கைவிட முடியாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இப்னு ஹைய்யானுக்கு முன்னரே எகிப்து, அலக்ஸாண்டிரியாவை சேர்ந்த காலித் இப்னு யாசீத் என்பவர் அல்கெமியின் தந்தையாக வர்ணிக்கப்படுகிறார். இப்னு அல் நதீம் மற்றும் ஹஜ்ஜி கலீபா போன்ற வரலாற்றாசிரியர்கள் கிதாப் அல் கிஷாராத், கிதாப் அல் ஸஹிபா அல் கபீர், பிர்தௌவ்ஸ் அல் ஹிக்மா போன்ற வேதி மற்றும் இலக்கிய நூல்களை படைத்த காலித் இப்னு யஸூதின் காலம் யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் கிபி.721-815 வரை வாழ்ந்த ஜாபிர் இப்னு ஹைய்யான் பற்றிய நிறைய தகவல்கள் விரவிக்கிடப்பதால் வேதியியலின் தந்தை என இவர் போற்றப்படுவதாக  கூறுகின்றனர். அவரது புத்தக தொகுப்புகளில் இப்னு ஹைய்யானின் உருவப்படமும் வரைந்து வைக்கப்பட்டிருந்தது அதன் உதவியைக்கொண்டு கிபி.15 நூற்றாண்டு  ஐரோப்பிய ஓவியரான கொடிசி அஸ்புர்னாமியானி வரைந்த இப்னு ஹைய்யான் அவர்களின் உருவப்படம். மீண்டும் வரைந்து வைக்கப்பட்டது.

815ல் டிசம்பர் 25 ல் மரணமடைந்த ஜாபிர் இப்னு ஹைய்யான் இன்றளவும் கெபர் எனும் பெயரால் ஐரோப்பாவில் போற்றப்படுகிறார். இனி வேதியியலின் தந்தை லவாய்ஷியர் என குழந்தைகளுக்கு கற்றுத்தராதீர்கள். இஸ்லாமிய தத்துவங்களை பயின்ற ஜாபிர் இப்னு ஹைய்யான் என்று கூறுங்கள்.

ஜாபிர் இப்னு ஹைய்யான் கண்டுபிடித்த மற்ற கண்டுபிடிப்புகள் :

1. காஸ்டிக் சோடா
2. NaOH பிரித்தெடுத்தல் (சோடியம் ஹைட்ராக்சைடு)
3. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
4. நீர்மமாக்குதல்,தனிமங்களை பிரித்தெடுத்தல், வடிகட்டுதல் மற்றும் படிமமாக்குதல் போன்றவற்றிற்கான பார்முலாக்களை தயாரித்தார்.
5. அர்ஸனஸ் அமிலம், ஹைடிரேடட் பாதரஸம்
6. வெள்ளியை தங்கத்தில் இருந்து பிரித்தெடுத்தல்
7. வண்ணப்பூச்சுகள் – Paint
8. துணிகளுக்கு சாயமிடுதல்
9. உலோகங்களை தூய்மைப் படுத்துதல், பிரித்தெடுத்தல் இவை இன்றளவும் அச்சுபிசகாமல் நவீன காலத்திலும் பயன்பாட்டில் உள்ளன.

ஜாபிர் இப்னு ஹைய்யானின் புரட்சிகரமான கண்டுபிடிப்பிகளில் சில:

1. துருப்பிடிக்காத இரும்பு , தங்கத்தை உருக்கி நீர்ம பொருளாக வைத்தல்.
2. தீப்பிடிக்காத காகிதம்
3. தண்ணீரில் நனையாத துணி.
2,3 ஆகிய இரண்டும் நைட்ரிக் அமிலம் உதவிகொண்டு பிளாஸ்டிக்கின் முதல் பரிமாணமாக அவை கண்டுபிடிக்கப்பட்டன. பிளாஸ்டிக்கின் முதல் மூலப்பொருள நைட்ரிக் அமிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் நூலகங்களில் இப்னு ஹைய்யான் எழுதி குறிப்புகள் அடங்கிய சுமார் 500 புத்தகங்களும் ஏராளமான கட்டுரைகளுமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.அவர் துவங்கி வைத்த ஆராய்ச்சிகளை ஐரோப்பிய ஆய்வாளர்கள் மேம்படுத்தியதன் மூலம் இன்று அவர்கள் நாகரீகமானவர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் அறியப்படுகிறார்கள்.

ஜாபிர் இப்னு ஹைய்யான் அவர்களை, அல்’அஸ்தி , அல்’கூஃபி, அல்’சூஃபி மற்றும் அல்’துசி போன்ற மாற்றுப்பெயர்களாலும் அழைக்கிறார்கள்.

நன்றி:- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)

Related Posts