அபுயூசூப் யாகூப் இப்னு இஷாக் அஸ்ஸபா அல்கிந்தி , இஸ்லாமிய உலகிற்கு கிரேக்க தத்துவங்களை அறிமுகம் செய்த தத்துவயியலின் தந்தை என வரலாற்று ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்படுகிறார். ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் என்பது இஸ்லாமிய அறிவுத்தேடலுக்கான காலம். அல்கிந்தியும் ,விஞ்ஞானி இப்னு ஹைய்யான் போலவே ஒரு பல்துறை மேதையாக அறியப்படுகிறார். இஸ்லாமிய தத்துவம், கணிதம், பௌதீகம் அதுபோக இஸ்லாமிய உலகின் இசை மேதையாகவும் அல்கிந்தி உலா வந்தார்.
தத்துவங்களின் தந்தை என பெருமைப்படுத்தப்படும் அல்கிந்தி, கிரேக்கர்களின் ஹெலனிய கால தத்துவங்களை பயின்றிருந்த முதல் அரபுலக மேதை ஆவார். ஹெலனிஸ்டிக் காலம் என்பது அலெக்சாண்டரின் மரணத்திற்கு பிறகு ரோமர்களின் தாலமிக் ஆட்சியும் வீழ்ச்சியுற்றது. ஆனாலும் கி.மு. 300 வது நூற்றாண்டில் தால் கிரேக்கர்களின் ஐரோப்பிய ஓவியம்,இசை,இலக்கியம் மற்றும் சர்வகலா வித்தைகள் உச்சத்தை அடைந்த காலமாக அந்த காலம் வரையறை செய்யப்பட்டுள்ளது.
அல்கிந்தி ஒரு தேசாந்தரி. அவருக்கு பயணம் செய்வது மிக பிடிக்கும். பல ஊர்களுக்கும் பிரயாணம் செய்து அங்குள்ள கலைகளையும் கல்வியையும் கற்று வருவதில் மிக விருப்பம் கொண்டவர். கிபி.801ல், அல்கிந்தி இராக்கின் கூஃபாவில் , கிந்தா பழங்குடியில் பிறந்தவர். கூஃபாவில் அப்துல் ரஹ்மான் இப்னு முஹம்மது இப்னு அல் அஷாத் என்பவருடைய ஆட்சியில் அந்நகரின் ஆளுநராக இருந்தவர்
அல்கிந்தியின் தந்தை இஷாக். பதவியில் இருந்த அவரது தந்தைக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அப்பாஸிய கலிபா அல் மஹ்மூனின் நட்பினை பெற்றார். பக்தாதிற்கு கல்வி பயில சென்ற அல்கிந்தியை , கலிபா அல்மஹ்மூன் தமது பைத்துல் ஹிக்மா கல்வி நிலையத்தில் கிரேக்க தத்துவியியல் பயிற்றுவிப்பாளராக்கினார். அங்கு அரபு எழுத்துக்களை வரையும் கலிக்கிராபி ஆசிரியரும் ஆனார்.
அல்மஹ்மூன் இறப்பிற்கு பிறகு அவரது சகோதரர் அல்முதசிம் கலிபாவாகிய பிறகு அவரது மகன் அல்வாதீஃகிற்கு ஆஸ்த்தான் அரசவை ஆசிரியராக அல்கிந்திக்கி பதவியுயர்வு கிடைத்து. ஆனால் அல்கிந்தி மீது விழுந்த ஒரு குற்றச்சாட்டு அவரை பைத்துல் ஹிக்மாவிலிருந்து விலகச்செய்தது, முஸ்லிமல்லாத மாணவர்களுக்கு அங்கே பாடங்கள் பயிற்றுவிக்க கூடாது என்கிற பின்னாளைய கலிபா அல்முத்தவகீலின் முரட்டு பிடிவாதம் அல்கிந்தி போன்ற தேசாந்திர மேதைகளுக்கு சரிப்பட்டு வராது , ஆகவே அவர் பைத்துல் ஹிக்மாவிலிருந்து விலகிக்கொண்டார்.
இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் இப்னு அல்நதீம் தமது புத்தகத்தில் குறிப்பிட்ட வகையில் அல்கிந்தி , 260 புத்தகங்களை எழுதியுள்ளார், அதில் 32 புத்தகங்கள் வடிவியல் (Geometry)யும், 22 புத்தகங்கள் மருத்துவம் மற்றும் தத்துவம் பற்றியும், தர்க்கவியல் (logic) பற்றி 9 புத்தகங்களையும், பௌதீகம் (Physics) பற்றி 12 புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்றும்,
அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்துபோய்விட்டதாகவும் கூறியுள்ளார். அவற்றில் சில லத்தீன் மொழி மறுபதிப்பாக உள்ளதாகவும் அவற்றை Gerard of Cremona பாதுகாத்து வைத்திருந்தது தெரியவருகிறது. , காணாமல் போன 24 அரபு மொழி புத்தகங்கள் 12ம் நூற்றாண்டில் துருக்கி அருங்காட்சியகத்தில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
கிரேக்க தத்துவங்களை இஸ்லாமிய உலகில் புகுத்திக்காட்ட அதிகம் விரும்பிய அல்கிந்தி, பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரை மானசீக குருவாக ஏற்றவராவார். அரபுலகின் சீரற்று இருந்து சொல் அட்டவணை (Vocabulary)யை சீர்த்தி முதன்முதலில் அரபு மற்றும் பாரசீக சொற்களை ஒழுங்குமுறைப்படுத்தி அதனை ஒரு அகராதியாக தயாரித்தார். உலகின் பல்வேறு மொழிகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல் களஞ்சியங்களை அரபிலும் பாரசீகத்திலும் எளிதாக மொழிப்பெயர்க்க அவ்வகராதி பெரிதும் உதவியது.
பௌதீக தத்துவம் (Metaphysics) துறையில் தமது கவனத்தை முழுமையாக வைத்திருந்த அல்கிந்தி அதனூடே கணிதம், மருத்துவம், தர்க்கவியல், பல்நிலை கலாச்சாரம்,பூகோளவியல்,கிரக சஞ்சாரம், கண்மருத்துவம் ஆகியவற்றிலும் தமது பங்களிப்பினை செய்துள்ளார். அதுபோக சில தன்னிலை செயல்பாடுகளாக உலகத்தை பிரித்தெடுப்பது, உலோக ஆயுதங்கள், உலோக ஆபரணங்கள் , கண்ணாடி தயாரிப்பது மற்றும் பூக்களின் சாறுகளை கொண்டு நறுமண திரவங்கள் (Perfumes) தயாரிப்பது ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார். அல்கிந்தியின் கண்டுபிடிப்புகளில் நறுமண திரவம் மற்றும் குறியாக்கம் ( cryptography) கண்டுபிடித்தது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அல்கிந்தி கண்டுபிடித்த குறியாக்கம் / கமுக்கவியல் இன்றைய உலகின் இன்றியமையாத கண்டுபிடிப்பாக போற்றப்படுகிறது. ராணுவங்கள், உளவு நிறுவனங்கள், போர் நேரத்து தகவல் பறிமாற்றம் ஆகியவற்றிற்கு மிக உபயோகமான கமுக்கவியல் தத்துவத்தை நிறுவியவர் அல்கிந்தி என்றால் மிகையாகாது. பொதுவெளியில் வைத்தாலும் அந்த ரகசிய குறியீட்டு சொற்களை சாதாரணமாக யாரும் படித்து புரிந்துகொள்ள இயலாதபடி கோடட் மெசேஜ் ( coded messages) ஐ உருவாக்கி நாடுகளின் உளவுப்பிரிவிற்கு சூத்திரம் தயாரித்தவர் அல்கிந்தி ஆவார். நவீன காலத்தில் நாடுகளின் ராஜாங்க ரகசியங்களை தாங்கிச்செல்லும் தூதர்கள் தவிர அந்த கோட் மெசேஜ்களை யாராலும் படித்து பொருள் கூற முடியாது.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இது மிக முக்கியம். தொலைத்தொடர்பு துறையில் மெசேஜ் டிகோடிங் துறை தான் இன்று உலகின் சக்திவாய்ந்த பணியாகும். வங்கிகளில் கோடுகள், பாஸ்வேடுகள் ஆகியவை தவறிப்போனால் என்னவிதமான விபரீதங்கள் தோன்றும் என்பதை நாம் இப்போது தான் அறிகிறோம் ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டுவாக்கில் இவற்றிற்கான தேவை என்ன? அந்நாளில் மக்கள்தொகை நெருக்கம், மக்கள் பரவல் , பூகோளவியலில் எரிகற்களின் பரவல் மற்றும் நிலநடுக்க எச்சரிக்கை போன்றவற்றில் இந்த கிரிப்டோகிரபி பயன்பட்டது.
அல்கிந்தி எழுதிய மறையீட்டுபகுப்பாய்வு பற்றிய நூல் Manuscript on Deciphering cryptographic Messages தான் பிறகு கிரிப்டோஅனாலிஸிஸ் என்கிற துறை பிறப்பதற்கு காரணமாக விளங்கியது. எனவே அல்கிந்தி Father of Cryptography என்றும் அழைக்கப்படுகிறார்.
வேதியியலின் அவரது மகா கண்டுபிடிப்பு என்பது உலகில் எந்த பொருளையும் அல்லது எந்த உலோகத்தையும் ரசவாத உதவியுடன் தங்கமாகவோ வெள்ளியாகவோ மாற்ற முடியாது என அறிவித்தார். அந்தந்த உலோக கலவையுடன் சேரும் வேறு உலோக மூலக்கூறுகள் புதிய உலோகத்தையே தரும் மாறாக அது தங்கம்,வெள்ளியாக மாறாது என்று அவரது ஆராய்ச்சி மூலம் உலகிற்கு அறிவிக்கப்பட்டது.
அதேசமயம் திராவகங்களை வேதியியல் பொருள் கொண்டு வடிகட்டுதல் (Distillation) மூலம் இயற்கையான அதன் நிறமிகளை வற்றச்செய்து தூய்மையான நீராக மாற்ற இயலும் என செய்துகாட்டினார். ரோஜாவில் இருந்து அதே சிவந்தநிற சாறு எடுத்து அதை வேதிப்பொருள் வடிகட்டல் மூலம் நிறமில்லாத பன்னீராகவும் ரோஜா எண்ணையாகவும் தயாரித்து காட்டினார். பூக்களையும் பழங்களையும் கொண்டு 107 வித வாசனையுடைய வாசனைதிரவியங்களை தயாரித்தார். இன்னும் நமக்கு அதே முறையில் தான் சென்ட்டுகள் தயாராகி வருகிறது. அதில் இப்போது ஃப்ரூட் பிளேவர் வேறு. பழரசங்களில் இருந்து வொயின் தயாரிப்பதையும் தனது கிதாப் அல் தராஃபுக் பி அல் ஐத்ரு எனும் நூலில் விளக்கியுள்ளார்.
இந்திய எண்ணியலை பயன்படுத்தி கணித சூத்திரங்களுக்கு விடை காண்பது எப்படி என்கிறதுபற்றி நான்கு பாகங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதினார் அது கிதாப் பி இஸ்திமால் அல்அதாத் அல்ஹிந்தி என்பதாகும். அல்கிந்தியின் இசை ஆர்வம் பற்றி கூறவேண்டுமானால் இசை கோர்வைகள் எழுதிய முதல் இஸ்லாமிய விஞ்ஞானி இவர்தான் , 15 இசைக்கோர்வைகள் இயற்றிய அல்கிந்தி , ஔது எனும் இசைக்கருவிக்கு ஐந்தாம் தந்தியை (String) இணைத்தவர் என்கிற பெருமையுண்டு. இன்றும் அது அல்கிந்தி’ஸ் ஸ்ட்ரிங் என்றே அழைக்கப்படுகிறது.
ஔது என்பது அரபுலக கிட்டார் ஆகும். இன்று அரபு இசை என்பது ஔது இன்றி இனிக்காது. அது ஒரு மந்திர ஒலியை தரும் இசை. இஸ்லாத்திற்கும் இசைக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அந்நாளிலும் அதற்கு முன்னரும் அரபுலக பாலை பிராந்தியங்களிலும் பலஸ்தீனிய,சிரிய பகுதிகளிலும் இந்த ஔதும், குழலிசையும் மிக பிரபலமாக இருந்துள்ளது. முதன்முதலாக தனிமையிடங்களில் இருந்து மெய்ஞானத்தை உணர முற்பட்ட முதல் சூஃபியாக அல்கிந்தி வரையறுக்கப்படுகிறார். அப்போது அது ஒரு பரவலாகிய செயல்பாடாக இல்லை. சூபியசம் என்கிற அமைப்பும் உருவாக்கமும் இல்லை ஆனால் இஸ்லாமிய மாணவர்களிடம் கிரேக்க தத்துவங்களை போதித்து உலகளாவிய தத்துவங்களை படிப்பித்த அல்கிந்தி தான் சூபியாக இருப்பது எப்படி என வாழ்ந்துகாட்டினார்.
அவர் தனித்திருக்கும் இடங்களில் ,நோய்வாய்படும் மனிதர்களுக்கு இயற்கை பொருட்களை கொண்டு மருந்து தயாரித்து கொடுத்து சுகமளித்தார். நோய்வாய்ப்பட்ட மனிதர்களுக்கு ரம்மியமான இசை மூலம் மனதினை அமைதிப்படுத்தும் மியூசிக் தெரபியை கையாண்டார். இசை என்பது மனிதனுக்கு கிரகங்களின் சக்திகளை பெற்றுத்தரவல்லது என நம்பிய அல்கிந்தியின் இசை வடிவங்களில் ஐந்து மட்டுமே தப்பிப்பிழைத்துள்ளது.
அப்பாஸிய பிராந்தியங்களின் மீது மங்கோலிய படையெடுப்பில் பைத்துல் ஹிக்மா மற்றும் பல அறிஞர்களின் படைப்புகளும் அழிக்கப்பட்டன. அவரது சிஷ்யர்களான அல்பைத் அபு பல்கி, அஹ்மது இப்னு அல்தையீப், இசாக் இஸ்ரேலி பென் சாலமன் எனும் யூதர், அல்மசார் அல்பல்கி, ராபர்ட் குரோசிஸ்ட், ரோஜர் பேகன் ஆகிய கிறுஸ்தவ மாணவர்களால் அல்கிந்தியின் புத்தகம் பல பாதுகாக்கப்பட்டன. சிஷ்யர்கள் சூழ இருந்தாலும் கிபி.873ல் அவர் தனியாக ஓரிடத்தில் இறந்துகிடந்தார் என இஸ்லாமிய வரலாற்று பதிவாளர் ஹென்ரி கோர்பின் கூறுகிறார். அவரது சிஷ்யர்களும் சில கண்டுபிடிப்புகளை கொடுத்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி:- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)