கருப்பை புற்றுநோய்க்கு இயற்கை மருந்து

by Mohamed Anas

மன்சூரா அப்துல் அஜீஸ் என்ற இந்த நைஜீரியா நாட்டுப் பெண் ஒரு மூலக்கூறு உயிரியலாளர் (Molecular Biologist).

நைஜீரியாவின் பயேரோ பல்கலையில் உயிரி வேதியியல் (Bio Chemistry) படிப்பில் முதுநிலை பட்டம் பெற்று ஆப்ரிக்க நாட்டின் மரபு மூலிகைகளில் புற்றுநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக நைஜீரிய அரசாங்கம் 86,000 டாலர்கள் உதவித் தொகை வழங்கியுள்ளது. தங்களது மரபு சொத்துகளின் மகிமையை கொண்டு உலக மக்களின் இன்றைய பெருந்துயரை துடைக்க வாய்ப்புள்ளதாக நைஜீரிய அரசு கருதுகிறது.  

முருங்கைக்கீரை , முள் சீத்தாப்பழம், காரக்காஞ்சிரம் மூலிகை…. அட இதெல்லாம் நம்ம ஊரு சரக்காச்சே என்று பார்த்தால் இன்னும் ஒரு முக்கியமான உள்நாட்டு சரக்கையும் சேர்த்து ஆய்வு செய்துள்ளார்.  


ஆப்ரிக்காவின் செனகல் முதல் சூடான் வரையுள்ள கடும் வெப்பம் நிலவுகிற வறண்ட மண்ணில் மட்டுமே விளையும் Guiera senegalensis என்ற மூலிகை  தான் அது. இதை சர்வநோய் நிவாரணியாக ஆப்ரிக்க மக்கள் கருதுகின்றனர்.  

மேலே குறிப்பிட்டுள்ள நம்ம ஊர் ஐட்டங்களோடு இந்த மூலிகையையும் இணைத்து ஆய்வு செய்து கருப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு அற்புதமான மருந்தை கண்டுபிடித்துள்ளார் மன்சூரா.  

இவர் பயணிக்கும் இந்த பாதை தான் தமிழக முஸ்லிம்களின் கல்விப் பாதையாக இருத்தல் வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக முஸ்லிம் தெருக்களில் நின்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கத்திக் கொண்டிருக்கிறது.    

உயர்கல்வியின் இலக்கு வேலை வாய்ப்பு என்ற கருத்தைப் போல ஒரு வடிகட்டிய முட்டாள் தனம் வேறில்லை. அனைத்து துறைகளிலும் மனித குலம் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு அளிப்பது தான் முஸ்லிம் உயர்கல்வியின் இலக்காக இருக்க வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த அறிஞர்களின் இலக்கு அப்படி இருந்ததால் தான் உலகின்  அதிகாரத்தை அல்லாஹ் முல்லிம்களிடம் வழங்கியிருந்தான்.    

அப்படி ஒரு மறுமலர்ச்சி காலத்திற்கு மன்சூரா அப்துல் அஜீஸ் வழிகாட்டுகிறார்.

Source :
https://t.guardian.ng/…/nigerian-scientist-develops…/

https://nimedhealth.com.ng/2020/05/02/biography-of-mansurah-abdulazeez-female-scientist-from-buk-who-developed-plant-based-anti-cancer-drugs/