முஸ்லிம்கள் இனி… கல்வி என்பதை ஆராய்ச்சி என்று அழைக்க வேண்டும்.

by Mohamed Anas

மின்சார உற்பத்தி பகிர்வு மற்றும் பயன்பாடு இவற்றில் அடுத்த 20 ஆண்டுகளில் மகத்தான மாற்றங்கள் ஏற்படப் போகின்றன.

கம்பிவட தொடர்பில்லாமல் உயரழுத்த மின்சாரத்தை தொலைதூரங்களுக்கும் கடத்தும் புதிய  தொழில் நுட்பத்தை துவங்கியிருப்பதாக நியூசிலாந்து நாடு அறிவித்துள்ளது. இது மனித வாழ்விலும் உலகின் இயக்கத்திலும் தலைகீழ் மாற்றங்களை கொண்டு வரும் என்று தெரிகிறது.

அதேபோல விண்வெளியில் சுற்றும் சாட்டிலைட் மூலம் சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை கம்பிவட தொடர்பு இல்லாமல் பூமியில் பெற்று கம்பிவடம் இல்லாமலேயே பூமியின் தொலைதூரங்களுக்கும் உயரழுத்த மின்சாரத்தை விநியோகிக்கும் தொழில் நுட்பத்தில் விரிவான ஆய்வுகள் நம் நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 

உம்மத்தில் கல்விச் சேவையில் ஈடுபடும் அறக்கட்டளைகள் சங்கங்கள் ஜமாஅத் நிர்வாகம் மஹல்லா மாணவர்களை சூரியஒளி (Solar) மின்காந்தம் (Electromagnet) மின்வேதியியல் (Electrochemical) போன்ற நாட்டின் உள்கட்டமைப்புத் துறை சார்ந்து தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஊக்கப்படுத்தி அவர்களின் ஆராய்ச்சி கால செலவுகள் முழுவதையும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக சமுதாய அமைப்புகளின் மாணவர் பிரிவினர் ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை இலக்காகவும் அரசியல் நடவடிக்கைகளை இரண்டாவதாகவும் வைத்துக்கொண்டால் சமூக நோக்குடைய விஞ்ஞானிகள் அதிகமாக உருவாகி வருவார்கள்.

இதை அடுத்த 50 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக செய்யும் நிதி ஆதாரங்களை அந்தந்த மஹல்லாக்களில் சிரமத்தையம் அவதூறுகளையும் தாங்கி கட்டாயம் கட்டமைக்க வேண்டும். இந்த ஆராய்ச்சிகள் மூலம்  எண்ணிலடங்கா நவீனகால தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உம்மத்தில் மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.  

முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நோட்டுபுக் பேனா ஸ்கூல் பேக் கொடுப்பதும், மாணவிகளுக்கு சட்டி பொட்டி சமயல் பாத்திரங்கள் வாங்கி கொடுத்து கல்வி உதவிகளை முடிக்கும் பிற்போக்குத்தனத்திற்கு இனியாவது முடிவு காட்டுங்கள்.

உம்மத்தின் நிலையான வளர்ச்சிக்கும் உயர்ந்த அதிகாரத்திற்கும் விதையாக இருக்கும் இந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு தாராளமாக பொருளுதவி செய்யுங்கள்.

நாம் அதிகம் நேசிப்பதை பொதுநலனிற்காக தியாகம் செய்யாமல், இந்த நாட்டில் நம்முடைய, நமது எதிர்கால சந்ததிகளுடைய  சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாது.

– CMN SALEEM

Related Posts