செத்து வரண்ட மண்ணை எடுத்து ஆய்வு
செய்தால் அதன் குணங்களையும் அதில்
பொதிந்துள்ள ஊட்டச்சத்துகளையும் தான் கணிக்க முடிகிறது.
அல்லாஹ்வால் மண்ணில் மறைத்து
வைக்கப்பட்டுள்ள புல் பூண்டு கீரை செடி கொடி மரம் வேர் கிழங்கு இவைகளின் விதைகளை எந்த தொழில்நுட்பத்தாலும் இதுவரை கண்டறிய முடியவில்லை.
மண்ணைப் படைக்கும் போதே அதில் உயிர்காக்கும் மூலிகைகள் தாவரங்களின் விதைகளை மண்ணோடு
மண்ணாக அரைத்தே அல்லாஹ் படைத்திருக்கிறான்.
பூமியின் எந்தப் பகுதியில் எந்த மண்ணில் என்னென்ன தாவரங்கள் மூலிகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த ராஜ இரகசியம்.
அல்லாஹ்வின் அனுமதியோடு…… சூழ்கொண்ட மேகங்கள் திரண்டு மழைநீர் என்ற உயிர்நீர்……வாடி வறண்டு கிடக்கும் மண்மீது சாய்ந்து சந்தித்து உறவாடுகின்றன.
மழைக்காக ஏங்கி காத்துக்கிடந்த மண் மழையை சந்தித்தவுடன் அகமகிழந்து குளிர்ந்து தனது நறுமனத்தை ஆனந்தமாக வெளிப்படுத்துகிறது.
சிலநாட்களில் பொசுபொசுவென்று புற்கள் மூலிகைகளை மண் பெற்றெடுக்கிறது. மண்ணோடு பெண்ணையும் இணைத்து விளைநிலம் என்று அல்லாஹ் சொல்வது இதற்குத்தானோ தெரியவில்லை.
மழையும் மண்ணும் கூடி பெற்றெடுத்த கீரைகள் தாவரங்களில் சிலவற்றை மட்டும் பறவைகள் கால்நடைகள் உண்ணுவதற்கு அல்லாஹ் அனுமதியளிக்கிறான்.
இவைகள் ஒவ்வொன்றையும் தனது அறிவைக் கொண்டு ஆய்வு செய்து தேவைக்கேற்ப பயன்படுத்துமாறு அல்லாஹ் மனிதர்களுக்கு அறிவுறுத்துகிறான்.
படைப்பின் அற்புதம். அல் ஃகாலிக்.
அறிவியலையும் இறையிலையும் இப்படி கற்றால்தான் அல்லாஹ்வுக்கும் உயிரினங்களுக்கும் பயனுள்ள வாழ்வு
வாழ முடியும்.
-CMN Saleem