வெட்டுக்கிளிகள் – அழிவுப் படையை ஆக்கப் படையாக மாற்றிய உயிரியல் ஆராய்ச்சி.

by Mohamed Anas

அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) கூறினார்கள் :

” நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு போர்களில் கலந்துகொண்டோம் அப்போது நாங்கள் வெட்டுக்கிளிகளை உண்டோம்”. (புஹாரி,முஸ்லிம்)

மனிதன் உண்ணுவதற்கு இஸ்லாம் அனுமதித்துள்ள வெட்டுக்கிளிகளை மாமிசம் உண்ணும் பிற உயிரினங்களுக்கும் உணவாக வழங்கலாம் என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தானின் தேசிய உணவுப் பாதுகாப்பு கழகத்தின் அதிகாரி முஹம்மது குர்ஷித் மற்றும் உயிரியல் துறை ஆராய்ச்சியாளர் ஜோகர் அலி ஆகிய இருவரும் வெட்டுக்கிளி படையெடுப்பிற்கு மிக எளிமையான  தீர்வை கண்டுள்ளனர்.

வெட்டுக்கிளிகளை பிராய்லர் கோழிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க தீவனமாக வழங்கும் திட்டத்தை வடிவமைத்துத் தந்துள்ளனர். கோழித் தீவனம் தயாரிக்கும் நிறுவனங்கள் வெட்டுக்கிளிகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும் செய்தி கேட்டு மக்கள் மூட்டை மூட்டையாக வெட்டுக்கிளிகளை பிடித்து அந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்த மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.

வெட்டுக்கிளிகள் இரவில் பறக்க இயலாததால் மக்கள் இரவு நேரங்களில் அவற்றை வேட்டையாடி வருகின்றனர்.நாள் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் (பாகிஸ்தான்) சம்பாதிக்கின்றனர்

சுதேசி ஜாக்ரான் மஞ்ச் என்ற RSS இன் சார்பு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக்  மகாஜன் அவர்கள் பாகிஸ்தானின் இந்த திட்டத்தை வரவேற்று பயனுள்ள திட்டங்கள் எங்கிருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  கூறியுள்ளார். 

இந்தியாவைப் போல எல்லாவற்றுக்கும் உலக நல நிறுவனத்தை (WHO) நம்பி இருக்காமல் எப்போதுமே சுயப்புத்தியோடு சிந்திக்கும் சீனா வெட்டுக்கிளிகளை வேட்டையாட ஒரு இலட்சம் வாத்துகளை கொண்ட வாத்து இராணுவத்தை உருவாக்கி பாகிஸ்தானிற்கு அனுப்பத் தயாராகி வருகிறது.

ஒரு வாத்து நாள்ஒன்றுக்கு இருநூறு வெட்டுக்கிளிகளை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

வேலைவாய்ப்பை பெறுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டும் தான் உயர்கல்வியும் ஆராய்ச்சியும் என்ற முதலாளித்துவ அடிமைச் சிந்தனையிலிருந்து உம்மத்தை மீட்டெடுக்காத வரை உம்மத்தின் பிற்போக்குத் தனம் தொடரவே செய்யும்.

உம்மத்தின் பிள்ளைகளிடம் ஆய்வுச் சிந்தனைகளை விதைப்போம்.அறிவின் மூலாதாரங்களான அல்குர்ஆனும் –  ஹதீஸும் ஆராய்ச்சிகளின் மூலாதாரங்களாக மீண்டும் உருவெடுக்கட்டும்.

– CMN SALEEM

Related Posts