…… உண்மையில் வீழ்ந்த கிலாஃபத்தை கட்டியெழுப்புவதென்பது அதன் உம்மத்தை சரியாக உருவாக்குவதின் மூலமே பூரணப்படும்.இதுவே சீரான மாற்றத்தை கொண்டு வரும். முஸ்லிம் உம்மத்திடம் தற்போதிருக்கின்ற நோய்களில் இருந்து அவர்கள் குணப்படுத்தப்பட வேண்டும்.
இதுதான் இஸ்லாமிய வாதிகளின் முன்னாள் இருக்கின்ற அடிப்படையான பணியாகும் இதற்கே முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது. இதோடு இணைந்ததாகவே இஸ்லாமிய அரசியல் சிந்தனையை கட்டியெழுப் புவதற்கான சித்தாந்த ரீதியான முன்னெடுப்புகள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
எனது கருத்தில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சிக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் ஒரு சதவீத பெருமானத்தைத்தான் வழங்குவேன்.ஏனைய 99 சதவீதமான பணிகள் அனைத்தும் பலவீனப்பட்டுள்ள முஸ்லிம் சமூக கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்வதற்கே ஒதுக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களிடம் பரவியுள்ள கீழ்த்தரமான பண்புகளான பொய் மோசடி ஏமாற்றம் தந்திரம் போன்றவைகளை காணும்போது நான் பொறுமை இழக்கிறேன்.இவைகள் நயவஞ்சகத்தின் அடையாளங்கள் அல்லவ…? இந்த பண்புகள் வாழும் போது இஸ்லாம் எவ்வாறு வாழ முடியும்.
திருமணம்,விவாகரத்து விவகாரங்களில் சமூகப்பிளவு,ஒற்றுமையின்மை,மகிழ்ச்சி மற்றும் கவலையின்போது நடந்து கொள்ளும் விதம் நண்பர்கள்.அயல் வீட்டினரோடு நடந்துகொள்ளும் விதம், முகஸ்துதி போலியான நடிப்பு போன்றவற்றை மனிதர்கள் தம்மிடம் வைத்திருப்பதால் தான் தரையிலும் கடலிலும் குழப்பங்களை காண்கிறோம் இவற்றை மாற்ற முயலாமல் சாதாரணமாக விட்டு விடுவதா….?
இன்னொருபுறம் சோம்பேறிகளாகவும் இயலாதவர்களாகவும் தேக்க நிலை கொண்டவர் களாகவும் இருப்பதோடு உலக விவகாரங்களில் அக்கறையில்லா தவர்களாகவும் ஆய்வு கண்டுபிடிப்பு உணர்வற்றவர்களாகவும் காணப்படு கின்றனர்.இவைகள் எம்மை பின்னோக்கி தள்ளுகின்றன.அந்நியர்கள் இவற்றிலிருந்து விடுதலையாகி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்ற மோசமான கீழ்த்தரமான பண்புகளை அகற்றாமல் எதனைக் கொண்டு இவற்றை நியாயப்படுத்தப் போகிறோம் .இந்த பண்புகளோடு எவ்வாறு தூய தேசத்தை நோக்கி நகர்வது….?இந்தப்பண்புகள் இருக்கும் நிலையில் இஸ்லாத்துக்கான எமது உத்வேகம் உணர்வு தூய்மை பெறுமா…….
இன்று கையாளாதவர்கள் நாளை சக்தி பெற்றவர்களாக…..? மாறுவார்களா….?
யா அல்லாஹ் இந்த நண்பர்களிடமிருந்து இஸ்லாத்தை பாதுகாப்பாயாக…..!
– ஷெய்க் முகம்மது அல் கஸ்ஸாலி.
நூல் – உணர்த்தப்பட வேண்டிய உண்மைகள்.