உள்ளத்தில் சுமப்பதற்கும் அறிவில் சுமப்பதற்கும் தகுதிகள் வேண்டும்.

by Mohamed Anas

தங்களுக்கு பிடித்தமான அறிஞர்களை தலைவர்களை அல்லது அரசியல் கட்சிகளை அறிவில் மட்டும் சுமக்கும் அழகிய இஸ்லாமிய பண்பை வளர்த்துக் கொள்வது நமது உள்ளத்திற்கும் உடலுக்கும் நாம் வளர்த்தெடுக்க விரும்பும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகவும் நல்லது.

சிலர் தாங்கள் விரும்பும் தலைவர்களின் மீதும் அரசியல் கட்சிகளின் மீதும் அசைக்க முடியாத அளவிற்கு நம்பிக்கை வைத்து அவர்களை தங்களது உள்ளங்களில் உணர்ச்சிப்பூர்வமாக சுமக்கின்றனர்.

இன்றைய சூழலில் நட்புகளில் விரிசல் ஏற்படுவதற்கும், உறவுகளில் சண்டை சச்சரவுகள் அதிகரிப்பதற்கும், சமூகத்தில் பகை உண்டாவதற்கும் இவை முதன்மை காரணங்களாக இருக்கின்றன.

ஒரு முஸ்லிம் தன் உள்ளத்தில் சுமப்பதற்கும் அதில் முழு நம்பிக்கை வைப்பதற்கும் இந்தஉலகில் தகுதியானதாக இருப்பது தீனுல் இஸ்லாம் மார்க்கத்தின் ஈமானிய கிளைகள் மட்டுமே.

தீனை நெஞ்சில் (உள்ளத்தில்) சுமக்க வேண்டும்.

மற்ற அனைத்தையும் அறிவில் சுமக்க வேண்டும்.

அறிவில் சுமக்க வேண்டியதை உள்ளத்தில் சுமக்கும் போது அதை யாராவது விமர்சித்தால் தகுதியற்றதுக்கு வேகப்பட வேண்டிய அவலநிலை உண்டாகும்.

நன்மையான காரியத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு. யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதுமில்லை விமர்சிப்பதுமில்லை. 

எதிலும் கடும்போக்குத்தனம் இல்லை. 

இந்த நிலைப்பாடு பொதுத்தளங்களில் இயங்குபவர்களின் பண்பாடாக இருந்தால் அவர்களின் உள்ளங்கள் அமைதியடையும். அவர்களால் மற்ற அனைவரும் அமைதியடைவார்கள்.

– CMN SALEEM

Related Posts