அமெரிக்கா பிரிட்டன் மற்றுமுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்ரேலிலும் அவர்களுடைய ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரையிலான பாடத்திட்டங்களில், பயிற்சிமுறைகளில், மாணவர்கள் இந்த இலக்கை நோக்கி அவரவர் துறையில் கூர்தீட்டப்படுவதை பார்க்கலாம்.
மேற்குலக மொழியையும் கலாச்சாரத்தையும் இந்த உலகிலேயே மேன்மையானது என்றும் மீதமுள்ள அனைத்தும் குப்பையானது என்றும் உலக மக்களின் சிந்தனையில் ஆழமாக பதியச்செய்வது.
ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தங்களுக்கு தலையாட்டும் பொம்மைகளை ஆட்சியில் அமர்த்துவது. ஆட்சியாளர்களின் பலவீனங்களை அறிந்து அவர்களை ஆசைகளுக்கு அடிமைப்படுத்துவது.
நாடுகளின் இயற்கை வளங்களை கண்டறிந்து வளர்ச்சி என்ற பெயரில் அவற்றை லாவகமாக சுரண்டுவதற்கு வட்டிக்கு பணம் கொடுப்பது. தங்கள் நாட்டில் காலாவதியான தொழில்நுட்பங்களையெல்லாம் ஏழை நாடுகளின் தலையில் பலவந்தமாக கட்டுவது.
கீழைத்தேய நாடுகளைச் சுற்றி நட்புகளுக்கு இடையில் பகையை உண்டாக்கி அவர்களின் ஆயுதத் தேவைகளுக்கு தங்களிடம் கையேந்த வைப்பது.
மேற்குலகின் எல்லா பல்கலைக்கழகங்களிலும் எல்லா படிப்புகளின் உள்ளிலும் இந்த வஞ்சகம் ஒளிந்து கொண்டிருப்பதை அவர்களுடைய கல்விமுறையை விமர்சன கண்ணோட்டத்துடன் கூர்ந்து கவனிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
மேற்குலகின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் எளிதாக நிறைவேற்றுவதற்கு தேவையான மாதஊதிய பணியாளர்களை உருவாக்கும் வேலைகளைத் தான் உயர்கல்வி ஆராய்ச்சிப் படிப்புகள் என்ற பெயரில் நம் நாட்டின் கல்விமுறை நிதானமாக செய்து கொண்டிருக்கிறது.
இடையில் சிக்கிக்கொண்ட முஸ்லிம் சமூகமும் தனது பாரம்பரிய கல்விமுறை மீதான பிடிமானம் இல்லாமல், உலகிற்கு அநீதி இழைக்கும் மேற்கத்திய கல்வி முறைக்கு மாற்றாக இஸ்லாமிய கல்விமுறையை வளப்படுத்தி முன்னிறுத்த வேண்டும் என்ற எந்த வேட்கையும் இல்லாமல் அவர்களுக்கான அடிமைச்சேவகத்தை எந்த பதற்றமுமின்றி செய்து கொண்டிருக்கிறது.
– CMN SALEEM