Political Strategy – அரசியல் மூலோபாயம்

by Mohamed Anas

தமிழகம் மற்றும் மேற்குவங்க தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தியாவிலேயே மிகவும் அதிகாரமிக்க நபராக I – PAC நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோர் மாறிப்போகலாம்.

அமெரிக்கத் தேர்தல் முடிவுகளும், இந்திய அரசியலில் பிரஷாந்த் கிஷோர் ஏற்படுத்திய தாக்கமும் சேர்ந்து Political Strategy என்ற அரசியல் தந்திரங்களை கற்றுத்தரும் இந்த ஆராச்சிப் படிப்பு அறிவுஜீவிகள் மத்தியில் இப்போது பரவலாக பேசப்படுகிறது.

கடந்தகால நிகழ்கால அரசியல் நிலவரங்கள், அவை குறித்த ஆராய்ச்சிகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் திட்டமிடுதல்கள், மக்களின் மனநிலை மற்றும் தேவைகள், வேட்பாளர்களை தரப்படுத்துதல்,நவீன ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்துதல், எதிர்தரப்பு வேட்பாளரின் பலம் பலவீனங்கள் இவற்றை பல தந்திரங்களுடன் கையாண்டு தேர்தல்களில் வெற்றிபெறும்  நுட்பங்கள் அடங்கியது தான் இந்த அரசியல் மூலோபாயம் என்ற ஆராய்ச்சிப் படிப்பு.

இந்த ஆராய்ச்சிப் படிப்பு இந்தியாவில் பெரிதாக அறிமுகம் இல்லாத நிலையில் பிரஷாந்த் கிஷோர், சுனில் (அதிமுக) போன்றோரின் திட்டமிடுதல்,மற்றும் தலைவர்களை சந்தைப்படுத்தும் வியூகங்களால் ஈர்க்கப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் வாரிசுகள் மற்றும் ஆதிக்கச் சாதி மாணவர்கள் அதிகமானோர் வெளிநாடுகளில் இந்த படிப்பை படிக்கின்றனர்.

தேர்தல் அரசியலில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகளில் உள்ள இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி போன்று இனிவரும் காலங்களில் Political Strategist Wing என்ற நவீன அணியின் தேவை கட்டாயம்.

–  CMN SALEEM

Related Posts