உடல் இரசயனங்களை தங்கள் விருப்பப்படி பயன்படுத்த திறன் படைத்த ஒரே உயிரினம் சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky) நாய்கள்!

by Mohamed Anas

சைபீரியன் ஹஸ்கீஸ் தற்காலத்தில் அலாஸ்கா உள்ளிட்ட பனிப்பகுதிகளில் மிகவும் பிரபலமான நாய்வகை.

அலாஸ்கா போன்ற துருவப்பகுதிகளில் மனிதர்களின் உற்ற நண்பன் சைபீரியன் ஹஸ்கீஸ். பனிப்பகுதிகளில் அது மனிதர்களுக்கு பல்வேறு வகையிலும் பேருதவியாக இருக்கிறன.சிறந்த நாய் இனங்ளுக்கான தரவரிசை பட்டியலில். பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக ஹஸ்கி முதலிடத்தில் உள்ளது. 

ஹஸ்கிகளின் பிறப்பிடம் சைபீரியா. கடினமான. ஆர்க்டிக் பகுதியின் மிகக்கடுமையான பனி நிலைமைகளில் வேலை செய்யும் திறன் பெற்றவை. எனவே மக்கள் அன்பான இந்த நாய் இனத்தை வீட்டு நாய்களாகவும் வளர்க்கின்றனர்.

அலாஸ்கா பழங்குடி மக்கள் ஹஸ்கி நாய்களின் சிறப்பு திறன்களை அறிந்து சைபீரியாவில் இருந்து தங்கள் பகுதிக்கு 1909 ஆம் ஆண்டு வாக்கில் கொண்டு வந்தனர். அலாஸ்காவிற்கு ஹஸ்கிகள் வந்து நூற்றிப்பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

மிகச்சிறப்பாக பனிச்சறுக்கு வண்டிகளை இழுக்கும் என்பதற்காகத்தான் முதலில் ஹஸ்கிகளை சைபீரியாவில் இருந்து தங்கள் பகுதிக்கு அலாஸ்கன் மக்கள் கொண்டு வந்தனர். ஆனால் பிற்பாடு அவை அலாஸ்கன் ‘நோம்’ நகரத்தின் வீடுகளின் செல்ல நாயாக இவை இடம் பிடித்துவிட்டன.

ஒரு முறை இந்த பனி நகரமான ‘நோம்’ ல் திடீரென தொற்று நோய் ஒன்று பரவியது. கடும் பனிப்பொழிவான அந்த சூழலில் வீடுகளில் இருந்த நோயாளிகளுக்கு மருந்துகளை கொண்டு செல்ல இருந்த ஒரே வழி ஹஸ்கீஸ் தான். அவற்றால் தான் எத்தகைய பனியிலும் சறுக்கு வண்டிகளை இழுத்துச் செல்ல முடியும்.

சறுக்கு வண்டிகளை இன்று உலகில் மிகவும் திறன் பெற்றுள்ள ஒரே நாயினம் ஹஸ்கீஸ் மட்டுமே.

உடல் இரசாயனங்களை தங்கள் கட்டுக்குள் வைக்கும் ஒரே உயிரினம்:-

——————————————————————

தங்களது உடம்பில் கொழுப்புச் சத்தை பல மணி நேர ஓட்டத்திற்கும் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் ஹஸ்கிகளின் உடலில் ‘வளர்சிதை மாற்ற அமைப்பு’ வடிவமைக்கப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் வகையில் அதன் உடம்பில் இரசாயன நொதிகள் சுரக்கின்றன. உலகில் இந்த ஹஸ்கீஸ் நாயினத்திற்கு மட்டுமே இத்தகைய சிறப்பு ஏற்பாடு அவற்றின் உடலில் உள்ளது.

இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்புச் சத்தின் உதவியுடன் அவை பல கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு பனிச்சரக்கு வண்டிகளை சோர்வின்றி இழுத்துச் செல்கின்றன.

அலாஸ்கன் மக்கள் முதலில் பனியில் சறுக்கு வண்டிகளை இழுக்கத்தான் ஹஸ்கீஸ்களை தேர்ந்தெடுத்தனர். ஆனால் நடைமுறையில் அவர்களுக்கு அந்த நாய்களால் மற்றொரு பலனும் கிடைத்தது. அது தான் ஹஸ்கிகளின் பலமான குரைக்கும் ஒலி. பத்து பனிரெண்டு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அவை கத்துவது கூட கேட்கும். எப்போதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால் இந்த அலறல் பயனுள்ளதாக இருக்கும். அந்த உரத்த ஒலியைக் கொண்டு ஹஸ்கிகள் எங்கு உள்ளன அவை

உடல் ரீதியாக, சைபீரியன் ஹஸ்கீஸ் கவர்ந்திழுக்க கூடியவை. அவைகளுக்கு பிரகாசமான நீலக் கண்கள். அவற்றின் மேல் தோல் கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும்.

தமது கண்களில் இரண்டு வெவ்வேறு நிறங்களைக் கொண்ட ஒரே நாயினம் ஹஸ்கீஸ் மட்டுமே. அதிர்ஷ்டவசமாக, அது அவைகளின் பார்வையை பாதிப்பதில்லை.

ஹஸ்கீஸ்களின் போர்த்தப்பட்டுள்ள முடிகளுக்கு கீழே இரண்டு கெட்டியான அடுக்குகள் உள்ளன. இந்த (-) 50 டிகிரிக்கு கீழே வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது ஆர்டிக் உள்ளிட்ட குளிர்ந்த பகுதிகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.

ஹஸ்கீஸ் அற்புதமான குடும்ப நாய்கள். அடைக்கப்பட்ட வீட்டுச் சூழலுக்கும் இவை உடனடியாக பழகிக் கொள்ளும். வீட்டு உறுப்பினர்களிடம் நம்ப முடியாத அளவு விசுவாசத்தோடும் ஒட்டி உறவாடியும் வாழும்.

தமது உரிமையாளர்கள் எங்கு போனாலும் நிழல் போல் பின் தொடரும். குழந்தைகளிடம் மென்மையாகவும் கனிவாகவும் விளையாட்டுத்தனமாகவும் நடந்து கொள்ளும்.

வளர்ந்து ஹஸ்குகள் வீட்டில் இருக்கும் ஒரு குழந்தையுடன் தம்மை ஒப்பிட்டு குழந்தையின் அளவை அடையாளம் கண்டு, அதற்கேற்ப தங்கள் நடத்தைகளை சரிசெய்யும் அளவுக்கு புத்திசாலிகள்.

தாங்கள் எப்படி பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள் ஹஸ்கிகள். அதனால் அவை எளிதில் பயிற்சி பெறக்கூடியவை.

தங்களுக்கு ஏதுவும் செய்ய விரும்பம் இல்லை என்றால் அந்த நாளில் என்ன பயிற்சியும் எடுத்துக்கொள்ளாது. ஹஸ்கிகளுக்கு தாங்கள் என்ன நன் நிலையில் இருக்கிறோன் என்பது நன்கு தெரியும்.

ஒட்டுமொத்தமாக, ஹஸ்கீஸ் ஆச்சரியமளிக்கக் கூடியவை. நாயிகளின் உண்மையான குணத்தைக் கொண்ட நாய் இனம்.  வெளியே ஓடியாடி திரிய விரும்பும் ஒரு நாய். அதே நேரத்தில் வீட்டில் குழந்தைகளுடன் குழந்தையாக இருப்பதையும் விரும்பும்.

-கோவை இயற்கை நலவாழ்வகம்

Related Posts