உமிழ்நீர் குறித்த உங்கள் பார்வை இனி நிச்சயம் மாறும்….
அன்மையில் நண்பர் தனக்கு ஒருவர் அடிக்கடி உமிழ்நீரை துப்ப வேண்டும் போன்ற உணர்வு தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்றார். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ அருவருப்பு உணர்வின் வெளிப்பாடு என்று தோன்றும். உமிழ்நீர் குறித்த நமது பொதுவான எண்ணம்கூட அதுவே. ஆனால் உண்மையில் உமிழ்நீர் நமது செரிமானத்தின் முழு முதல் நொதி என்பதுதான் உண்மை. நமது உடலில் உயிரணுக்களுக்கு வெளிப்புறத்தில் இருக்கும் திரவங்களில் உமிழ்நீரும் ஒன்று.
நமது செரிமான இயந்திரத்தின் செயல்முறை நாம் உட்கொள்ளும் உணவை மெல்லும் நடவடிக்கையில் தொடங்குகிறது
அரவைக் கல்லில் தானியங்களை நசுக்கி மாவாக்குவது போல உணவு மூலக்கூறுகளின் மிகப் பெரிய தொகுதிகளை நன்றாக மென்று பற்கலால் அறைத்து சிறிய துகள்களாக உடைக்கிறோம்.
பெரிய உணவு பருக்குகளை மென்று நுண் துகள்கள் ஆக்குவதன் மூலம் அந்த உணவுப் பொருளுக்கு நமது செரிமான மண்டல இரசாயன நொதிகளுடன் நேரடி தொடர்பு கொள்ளுவதற்கான கூடுதல் பரப்பளவு உருவாகிறது.
வாயிலேயே நன்றாக மென்று அறைத்துவிடும்போது நாம் சாப்பிட்டவற்றை உணவுக்குழாயால் சுலபமாக இரைப்பைக்குள் அனுப்பிவிட முடியும். உணவுக்குழாய் தனது அழுத்தத்தின் மூலம் சிறிய பெரிய உணவு உருண்டைகளை தள்ள வேண்டிய சூழல் தவிர்க்கப்படும்.
வாயில் நன்றாக மென்று சாப்பிடுவதின் மற்றொரு நன்மை முக்கியமானது. வாயில் அதிக நேரம் அரைக்கப்படும் போது நமது உணவு நீண்ட நேரம் நமது உமிழ்நீரில் நன்றாக கலந்து வினைபுரியும் வாய்ப்பு ஏற்படுகிறது.
செரிமானத்தின் வேதியியல் செயல்முறை இவ்வாறாக நமது வாயில் இருந்தே சிறப்பாக தொடங்குகிறது.
உமிழ்நீருடன் உணவின் தொடர்பு முக்கியமானது. ஏனெனில் இது உணவுக்கு வழுவழுப்பு தன்மை ஊட்ட உதவுகிறது. குறிப்பாக உலர்ந்த வகைகளை உமிழ் நீரில் நன்றாக கரையச்செய்து உணவுக்குழாய் வழியாக எளிதாக இறைப்பைக்குள் நழுவிச்செல்ல உதவுகிறது.
செரிமானத்தின் வேதியியல் செயல்முறைக்கு பங்களிக்கும் நொதிப்பான்கள் (என்சைம்கள்) உமிழ்நீரில்இருப்பதும் மிகவும் பயனளிக்கிறது.
மாவுச்சத்துகள் செரிமானம்:-
நமது வாய்க்குள் அமைந்துள்ள சுரப்பிகளில் சுரக்கும் உமிழ்நீரில் ஆல்பா-அமிலேஸ் எனப்படும் நொதி உள்ளது. நாம் உட்கொள்ளும் மாவுச்சத்துக்களை செரிப்பதற்கு இது அடிப்படையானது.
மாவுச்சத்துகளின் சில எளிய இரசாயன பிணைப்புகளை உடைக்க உமிழ்நீரின் ஆல்பா-அமலேஸ் பயன்படுகிறது.
நமது சாப்பாட்டில் உள்ள கொழுப்பின் முதல் கட்ட செரிமானமும் வாயிலேயே துவங்கிவிடுகிறது. நமது நாக்கின் அடிப்பக்கம் அமைந்துள்ள சுரப்பி வெளியிடும் லிபேஸ் என்ற நொதியின் உதவியால் இது நிகழ்கிறது.
நாம் நன்றாக மெல்லும்போது நமது இரப்பையின் கீழ்பகுதி தசை நன்றாக தளர்ந்து கொடுக்கிறது. இதனால் நாம் வாயில் உணவை நன்றாக மெல்லும் செயல், நமது இரைப்பையில் கூலாக்கப்பட்ட உணவு சிறுகுடலுக்குள் செல்லும் நடவடிக்கையை எளிதாக்குகிறது.
நமது இரைப்பையின் கீழ் முனையில், பைலோரஸ் எனப்படும் தசை உள்ளது. உணவு நமது இரைப்பையை விட்டு வெளியேறி சிறுகுடலுக்குள் செல்ல இந்த தசை நன்றாக தளர்ந்து கொடுக்க வேண்டும்.
நன்றாக மென்று போதுமான உமிழ்நீர் கலந்து விழுங்கும்போது அது பைலோரஸை நன்றாக தளர்த்துகிறது.
வாயில் போதுமான உமிழ் நீர் கலந்து நன்றாக மென்று நமது உணவை சாப்பிடுவதன் மூலம் நமது செரிமான பாதை முழுவதும் அந்த உணவு நமது உடலுக்கு நல்ல பலனை அளித்துக்கொண்டே செல்கிறது.
உமிழ்நீர் பரவல் மற்றும் உமிழ்நீர் அமிலேஸ் செயல்பாடுகள் நமது இரைப்பை உள்ளிட்ட செரிமான பாதை முழுவதின் செயல்பாடுகளை மேம்படுதுகிறது.
நமது உமிழ்நீர் சுரப்பி செயல்பாடு மண்ணீரல் செயல்பாட்டுடன் தொடர்புடையது.
நாம் உழிழ் நீர் கலந்து நன்றாக மென்று சாப்பிடாவிட்டால் பின்வரும் பாதிப்புகள் நமது செரிமான மண்டலத்தில் ஏற்படும்.
நாள்பட்ட இரைப்பை அழற்சி, முன்சிறுகுடல் புண் அல்லது நாள்பட்ட பெருங்குடல் அழற்சி ஏற்படும். இவர்களுக்கு சிட்ரிக் அமிலம் தூண்டுதலில் தொடர்புடைய உமிழ் நீர் சுரப்பிகள் செயல்பாட்டில் குறை ஏற்பட்டிருக்கும். இதனால் மாவுப்பொருள் நொதிப்பான் அமிலேஸ் செயல்பாட்டில் குறை ஏற்படுகிறது.
உதாரணமாக, நமது உமிழ்நீரிலும், கீழ் குடலிலும் உள்ள பாக்டீரியா நுண் கிருமிகள் நமது உணவில் கிடைக்கும் நைட்ரேட்டை (NO3) நைட்ரைட்டாக (NO2) வும், நைட்ரைட்டை நைட்ரிக் ஆக்சைடாக (NO) மாற்றும். இந்த நைட்ரிக் ஆக்சைடு, நமது குடல் உட்சுவரின் சரியான செயல்பாட்டைப் பாதுகாக்க உதவும்.
நம் உணவில் இருந்து வைட்டமின் பி 12 ஐ பிரிந்து வெளிப்படுத்த இரைப்பை அமிலங்கள் தேவை. அவ்வாறு வெளியேறிய வைட்டமின் பி 12 பிற்பாடு உமிழ்நீர் மற்றும் இரைப்பை திரவங்களில் உள்ள ஹாப்டோகோரின் என்ற இனிமப்புரதத்துடன் (கிளைகோபுரோட்டின்) பிணைக்க இரைப்பை அமிலங்கள் அனுமதிக்கின்றன.
கோடையில் ஒருவருக்கு குறைபாடுள்ள துடிப்பு இருந்தால், ஒருவருக்கு எரிச்சல், கவலை, படபடப்பு மற்றும் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு இருக்கும். இதன் விளைவாக உடலின் கீழ் பகுதி உயிற்திறன் ஓட்ட நெடுவரைகளின் கிளர்ச்சி உயிர் அற்றல் (Yang Qi) சரிந்துவிடும். இதனால் வயிற்றுப்போக்கு, விந்தணு தானாக வெளியேற்றம் மற்றும் பல பாதிப்புகள் ஏற்படும்.
நமது உடலின் தளர்ச்சி நிலை உயிராற்றல் உறுப்புகள் ஐந்தும் அதனதன் எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளன. இதயம் வெப்பத்தை எதிர்க்கும். நுரையீரல் குளிரை எதிர்க்கும். கல்லீரல் காற்றை எதிர்க்கும். மண்ணீரல் ஈரத்தை எதிர்க்கும். சிறுநீரகங்கள் வறட்சியை எதிர்க்கும்.
தளர்ச்சி நிலை உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் அவற்றுடன் தொடர்புடைய உடல் திரவங்களும் உள்ளன.
வியர்வை என்பது இதயத்தின் வெளிப்பாடு; சளி நுரையீரலின் வெளிப்பாடாகும்; கண்ணீர் கல்லீரலின் வெளிப்பாடு; செரிமான திரவம் மண்ணீரலின் வெளிப்பாடு; உமிழ்நீர் சிறுநீரகத்தின் வெளிப்பாடாகும்.
உமிழ்நீர் தளர்ச்சி நிலை உயிர் ஆற்றலுடன் தொடர்புடையது. உமிழ் நீரை விழுங்குவதன் மூலம் அந்த ஆற்றல் உடலின் உட்புறத்துடன் தொடர்பு கொள்கிறது.
சிறுநீரக கோளாறுகள் காரணமாக இருமல் முதுகு வலியுடன் வருகிறது; இவ்வாறான இருமலில் கபம் அல்லது உமிழ்நீர் உள்ளது. சிறு நீரகம் தளர்சி நிலை உயிராற்றல் உறுப்பு. அதில் கோளாறு ஏற்பட்டால் தனக்குள் வந்த உமிழ் நீரை உடல் வெளியேற்றி விடுகிறது. அவ்வாறு நிகழும்போது தனக்கு உமிழ் நீர் மூலம் கிடைக்க வேண்டிய தளர்ச்சி நிலை உயிராற்றலை பெற இயலாமல் சிறு நீரகம் மேலும் வலு இழக்கிறது.
வாந்தியும் பற்களும் உவர்ப்பு உமிழ் நீரும்:-
நமக்கு சில நேரங்களில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி வரும் நிலை ஏற்படும். அதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்னர் நமது உமிழ் நீர் உப்புக்கரிக்கும். அவ்வாறு உமிழ் நீரில் உப்பு கலப்பதற்கு ஒரு மிக முக்கிய காரணம் உள்ளது.
நமது இரைப்பையில் இருந்து மேல் நோக்கி வாந்தியாக குமட்டிக் கொண்டு வரும் உணவுக் கலவையில் இரைப்பையின் கடுமையான செரிமான அமிலங்கள் இருக்கும். இவை நேரடியாக நமது பற்களில் பட்டால் அவற்றின் வழுவழுப்பான பூச்சு பாழ்பட்டு விரைவில் சீர்கெட்டுவிடும். அதைத் தடுக்க வாயில் உப்புடன் கூடிய உமிழ் நீர் சுரந்து பற்களுக்கு பாதுகாப்பு அரணை ஏற்படுத்துகிறது.
உமிழ் நீருக்கு இவ்வளவு சிறப்பு இருக்கும்போது இனிமேல் நாம் அதை உயர்வாகவே பார்க்கப் போகிறோம்.
இவ்வளவு சிறப்பானது உமிழ் நிர். நம் வாழ் நாளில் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீரைக் கொண்டு இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பலாமாம்.
-கோவை இயற்கை நலவாழ்வகம்