உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிக்கும் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது. மனிதன் தவிர . மனிதனுக்கு இயற்கையாக ஆடை அணிவித்து பிறக்க வைக்க முடியாது. பிராணிகளில் சில ரோமங்கள் இன்றி தோலுடன் பிறக்கிறது. வளர வளர அவற்றிற்கு தனித்தனி அடையாளங்களுடன் ரோம வளர்ச்சி உண்டாகிவிடுகிறது.
மனிதனுக்கும் அதேபோல ரோம வளர்ச்சி இருந்திருந்தால் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையிருக்கும். மனிதர்கள் கூறும் பொய்களை உடைக்கவே இறைவன் பல அத்தாட்சிகளை விட்டுவைத்துள்ளான். மனிதனுக்கு ஆடை, மிருகங்களுக்கு ரோமம், பறவைகளுக்கு இறகுகள் ஆனால் மரத்திற்கு?
மரத்திற்கு ஆடை அதன் பட்டைகள். அவற்றிற்கு ஆங்கிலத்தில் Bark என்று பெயர். மரங்களின் தண்டுப்பகுதி Heartwood,Xylem,cambium, pholem and Bark எனும் ஐந்து அடுக்குகளை உடையது. இதில் செடி முளைக்கும் போது உருவாகம் Heartwood எனும் தண்டுப்பகுதி மிக மிக மெல்லிய ஒன்றாக தான் இருக்கும். வளர வளர தான் அந்த ஸ்டெம்மில் ,பார்க் எனும் மேல் தோலாக ஐந்தாவது அடுக்கு உருவாகும். ஒரு செடி வளர ஆரம்பித்து அதன் 10%த்தை பூர்த்தி செய்த பிறகே மரத்தண்டுகளில் அதன் பட்டை உருவாக தொடங்கும்.
நான்கு வகையான மரத்தண்டுகள் (Stem) உண்டு. பொதுவாக நிலைத்து நிற்கும் மரங்களுக்கு தான் பட்டைகள் தோன்றும். பப்பாளி,முருங்கை போன்ற மரங்களுக்கு பட்டைகள் இருக்காது அதுபோல காய்கறி செடிகளுக்கு பட்டைகள் தோன்றாது. ஒரு மரத்தண்டின் மிக மெலிதான பகுதி அதன் பட்டைகள் தான்.
பட்டைகளை உடைய மரங்கள் நெடுநாள் நீடித்து வாழ்கின்றன். அதற்கு காரணம் பட்டைகள் தான். மரத்தின் பட்டைகள் இல்லாமல் போனால் பூச்சிக்கடிக்கு பாதிப்படைந்து மரங்கள் நோய்வாய்படும். காலநிலை மாற்றத்தில் இருந்து மரங்கள் பாதுகாக்கும் பட்டைகள் , நெருப்பு பற்றி எரியும் போதும் மரத்திற்கு அரணாக விளங்குகிறது. பட்டை எரியும் போதே நெருப்பு அணைந்துவிட்டால் அந்த மரத்திற்கு எதுவும் ஆகாது.
பட்டை தான் மரத்தின் சட்டை
எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)