138
மூஸா இப்னு ஷாகிர் அப்பாஸிய கிலாபத் காலத்தில் வாழ்த்த ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரர். பின்னாட்களில் கலீபா ஹாரூன் ரஷீதின் மகன் கலீபா மாமூனின் நட்பால் பாக்தாத்தில் இருந்த பைத்துல் ஹிக்மாவில் வானியல் துறையில் பணியாற்றினார். இவரின் மூன்று மகன்களே ‘பனூ மூஸா சகோதரர்கள்’ என்று வரலாற்றில் அடையாளப் படுத்தப்படுகின்றனர்.
மூஸாவின் மரணத்திற்கு பின்பு அவர்களின் மூன்று மகன்களை பராமரிக்கும் பொறுப்பை கலீபா மாமூன் ஏற்றுக்கொண்டார். மூவரையும் பைத்துல் ஹிக்மாவில் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். பின்நாட்களில் மூவரும் இதே கல்வி நிறுவனத்தில் கிரேக்க நூல்களை மொழிபெயர்ப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு துறைகளில் கோலோச்சினர்.
எழுத்தாளர் :- முஹம்மது அனஸ், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்