Think Tank / சமூக சிந்தனைக் களம்
இன்றைய செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) உலகில் அனைத்து துறையிலும் அந்தந்த துறையின் வளர்ச்சிக்கு மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட,வரும் சவால்களை எதிர்கொள்ள இவ் உலகில் அடுத்து, அடுத்து வரும் தேவை என்ன என்று தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டுடிருக்கின்றது ஒவ்வொரு நிறுவனமும், அப்போது தான் தனது எதிர்காலத்தை நிர்னைக்க முடியும் எதிர்கொள்ள முடியும் போட்டி நிறைந்த இவ்வுலகில் எதிர்ந்து செல்ல முடியும் அதனால் தான் ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் முக்கியதுவம் பெருகின்றது.
இது போல் ஒரு சிறந்த சித்தந்தத்தை தொடர் உயிரோட்டமுள்ள ஆய்வுகளினாலேயே அதை வழிநடத்தினாலே வெற்றி பெற முடியும். இல்லையெனில் அது ஒரு கோட்பாடக தான் இருக்கும் நடைமுறையில் பயன்பாட்டில் இருக்காது.
உலகில் உள்ள ஒவ்வொரு கோட்பாடுகளும் அதனை நிலை நாட்ட அதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல அது அனுதினமும் அதை முன்னெடுப்பவர்கள் உயிரோட்டமுள்ள ஆராய்ச்சிலும் அடுத்து நகர்வு என்ன என்று அதை பின்பற்றுவர்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், வாழ்வியலிம்; கல்வியிலும் அதற்க்கு மேல் அதன் அரசியில் அதிகவனம் இச் சமூகத்தை எப்படி வழிநடந்துவது எந்த தலைமையில் செல்ல வேண்டும் ஒவ்வொரு நகர்வுகளையும் அந்த சித்தந்தத்தை வழிநடத்துவார்கள் மிக நீண்ட தொலைநோக்கு ஆய்வு திட்டத்தில் ஈடுபட்டுகொண்டுயிருக்கிறார்கள் அதை அம் மக்களுக்கு எப்படி அதை எடுத்து செல்வது என்று ஒரு விளக்கங்களும் அவ்வப்போது செய்து கொண்டிருக்கின்றனர் அதனால் தான் அந்த சித்தாந்தம் இவ்வுலகை ஆழுகின்றது, இவ் உலகின் ஆதிக்கம் செலுத்துகின்றது.
“எந்த ஒரு தேசத்திற்கும் அதன் சீரழிவு அதன் மெய்யியல் வீழ்ச்சியிலிருந்துதான் தோற்றம் பொறுகிறது. அதன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏனைய அறிவியல்களுக்கும் கல்வித்துறைக்கும் அச்சீரழிவு பரவுகிறது’’- (Al Alfghani )
நாம் இங்கு ஒரு சிந்தனை களத்தை கட்டமைக்க வேண்டும் இது இலாப- நோக்கற்ற அமைப்பாக முழுமையாக சமூக சிந்தனை மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களையும் பற்றிய ஒரு நீண்ட ஆய்வு, ஒரு தொலைநோக்கு பார்வையில் அமையவேண்டும். ஆளும் அரசின் கொள்கை, புதிய புதிய சட்டங்கள் இவைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது இவைகளை பற்றிய நீண்ட ஆய்வை நாம் தொடர்ந்து செயல்படுத்தபட வேண்டும். மேலும் உணவுமுறை, இன்றை நவீன மருத்துவம், வேளாண்மை, தொழில்நுட்பம், நமது இன்றைய கல்வி நிலை, பொருளாதாரம், இயற்கை வளம், நமது வாக்கு வங்கி அரசியல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தியாகங்கள், இவைகளை பற்றிய தொடர் நீண்ட ஆய்வுகளை செய்து தற்போதைய இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைக்கும், உலமாக்களுக்கும் ஆய்வு அறிக்கைகளை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.
அதன்படி நடைமுறை படுத்த பரிந்துறைக்க வேண்டும், சமூதாயத்தை மேலும் அரசியல்மயமாக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் நமது தலைமையின் அரசியல் மற்றும் இதர நடவடிக்கைகள் என்ன என்று தெளிவாக விளங்க வேண்டும். இதை நாம் செம்மையாக நடைமுறை படுத்தினால், சமூகத்தை அரசியல்படுத்தினால் நமது தலைமைகள் சிறந்த வழியில் நம்மை வழிநடத்துவார்கள், இங்கு ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அரசியல் அனாதையாக நிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
“ஆரம்பகால (ஆதி) முஸ்லிம்களிடம் அறிவியல் இருக்கவில்லை. ஆனால் மெய்யியல் மீதான ஆவல் அவர்களிடம் வளர்ச்சி பெற்றதற்கு இஸ்லாத்திற்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். அதன் காரணமாக உலகின் பொது நடவடிக்கைகளையும் மனிதர்களுக்கான அவசியத் தன்மைகளையும் அவர்கள் ஆராயத் தொடங்கினர்.”- ஆஃப்கானி
இதன் விளைவாக, 8ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து சுமார் 400 வருட காலம் அறிவியலும் அதன் வளர்ச்சியும் மற்றும், உலக அரசியல் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. சிந்தனையும் கருத்துக்களும் அடிப்படையில் ஒரு தனி மனிதனே சமூகமோ அடையும் வெற்றியே அரசியல், பொருளியல் துறைகளில் அதன் வெற்றிகளுக்குக் காரணமாக அமைகிறது. சிந்தனையும் ஆய்வும் வாழ்வின் முக்கிய வளமாகும் ஒரு சமூகத்தின் உயிரோட்டம். ஒரு நல்ல சிந்தனை ஆய்வு களத்தை உருவாக்குவோம் எதிர்க்காலத்தை நம் வசப்படுத்துவோம்
Thanks:- Noor Mohamed
Email:- tajnmohamed99@gmail.com