தாவரவியலின் தந்தை அபு – ஹனிஃபா தின்வாரி (828 – 895)

by Mohamed Anas

அபு ஹனிஃபா தின்வாரி (828 – 895) 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைச்சிறந்த தாவரவியலாளர். ஆரம்ப கால முஸ்லிம் தாவரவியலாளர்களில் ஒருவராவார்.

அந்தலூஸ் (al-andalus) என்று அழைக்கப்படும் முஸ்லிம் ஸ்பெயினில் வாழ்ந்தார்.

அந்தலூசியா கற்றலின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஐரோப்பா மற்றும் இஸ்லாமிய உலகம் முழுவதும் கலாச்சாரம், பொருளாதாரம்  ஆகியவற்றின் முன்னணி மையமாகத் திகழ்ந்தது, தாவரவியல், விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றிலும் தலைச்சிறந்து விளங்கியது. எனவேதான் பெரும்பான்மையான தாவரவியலாளர்கள் அந்தலூஸில் தோன்றினார்கள்.

தின்வாரி: வானியல், விவசாயம், தாவரவியல் மற்றும் உளவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய ஒரு பல்துறை நிபுணர்.

இவர் இஸ்பஹான் நகரில் வானியல், கணிதம் மற்றும் இயக்கவியல் பயின்றார், கவிதை மற்றும் மொழியியல்களை கூபா மற்றும் பஸ்ராவில்  பயின்றார். 

1908ஆம் ஆண்டில் பிரேஸ்லவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் ஜெர்மன் அறிஞர் சில்பேரபேர்க் மற்றும் முகமது ஹமிதுல்லாவால் அபு ஹனிஃபாவின் ஆய்வுப்பணி உலகுக்கு மறுஅறிமுகப்படுத்தப்பட்டது, இதில் சுமார் 400 தாவரங்களின் விளக்கங்கள் உள்ளன. இவை தின்வாரி எழுதிய புத்தகத்தின் ஆறு பகுதிகளில் இரண்டு பகுதிகளில் எடுக்கப்பட்டது மட்டுமே.

இவரது பங்களிப்புகளில் “தாவரங்களின் புத்தகம்” (Kitab al-Nabat – Book of Plants) முக்கியமானது. இந்த புத்தகம் ஆறு தொகுதிகளைக் கொண்டது. இதற்காக தாவரவியலின் தந்தை (founder of botany) என்று கருதப்படுகிறார்.

மொத்த தொகுதிகளிலும் சுமார் ஆயிரக்கணக்கான தாவர வகைகளை வரிசைப்படுத்தி இருப்பார். இவர் தாவரத்தின் பல கட்டங்களை விவரித்துள்ளார்  பூக்கள் மற்றும் பழங்களின் வளர்ச்சி குறித்தும் அதன் உற்பத்தி குறித்தும் விவரித்துள்ளார்.

தாவரங்களின் புத்தகம் Kitab al-Nabat (Book of Plants) இது அரபு மொழியில் எழுதப்பட்ட முதல் விரிவான மருத்துவ நூல்.

தின்வாரி தனது புத்தகத்தில் வானியல், விண்மீன்கள், கிரகங்கள் குறிப்பாக சூரியன் சந்திரனை கணக்கிட்டு பருவங்கள் மற்றும் மழையை கணக்கிட்டார்.

வளிமண்டல நிகழ்வுகள் (காற்று, இடி, மின்னல், பணி, வெள்ளம், பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள், கிணறுகள்) ஆகியவற்றுக்கு ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்தார்.

மணலை கருத்தில் கொண்டு நிலங்களை பல்வேறு வகையாக விவரித்துள்ளார். இதைக் கொண்டு எந்த தாவரங்கள் எந்த மண்ணில்  வளர்வதற்கு தகுதியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் நல்ல நிலத்தின் பண்புகள் மற்றும் குணங்களை விவரித்துள்ளார். இவ்வாறு நீண்ட அறிமுகத்தை கொண்டிருக்கும் இந்த நூலை ஒரு விவசாய நூலாகவே கருதலாம்.

இவர் தாவரத்தின் பரிணாமத்தை அதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஆய்வு செய்தார். மலர்கள் மற்றும் பழங்கள் வளரும் பருவத்தையும் உற்பத்தி ஆகும் கட்டங்களையும் ஆய்வு செய்தார். பின்பு தானியங்கள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் பேரிச்ச தோட்டங்களை எவ்வாறு அமைப்பது என்று ஆய்வு செய்து ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்தார்.

பின்னர் மலைகளில் வளரும் மரங்கள் சமவெளியில் வளரும் மரங்கள் மற்றும் பாறைகளில் வளரும் மரங்களை ஆய்வு செய்தார். இன்னும் தனது ஆய்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று நறுமணச் செடிகளைப் பற்றியும், சாயங்களில் பயன்படுத்தப்படும் தாவரங்கள் பற்றியும், டூத் பீக் செய்யப்படும் தாவரங்கள் பற்றியும், வில் மற்றும் அம்பு போன்றவைகளை தயாரிக்க பயன்படுத்தும் மரங்களைப் பற்றியும் ஆய்வு செய்தார்.

ஹமீதுல்லாஹ்வின் கூற்றுப்படி பார்த்தால் அல் தின்வாரியின் தொகுப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், முதல் நான்கு தொகுதிகள் தாவரங்கள் குறித்தது.

இரண்டாவது பகுதி தாவரங்களை அகர வரிசைப்படுத்திய அகராதி.

தாவரங்களின் வகைப்பாட்டிற்கு தஜ்னிஸ் அல் நபாத் என்ற ஒரு அத்தியாயத்தையே அர்ப்பணித்திருக்கிறார்.

இவருடைய இந்த அத்தியாயம் தாவரங்களின் வகைப்பாடு என்ன என்பதை பின் வந்த ஆய்வாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஒன்று. தின்வாரி சுமார்1000 ஆண்டுக்கு முன்பே தாவரங்களின் வகைப்பாடு என்ன என்பதை இந்த உலகிற்கு பறைசாற்றி உள்ளார்.

 அல்_தின்வாரியின் கிதாப் அல் நபாத்(தாவரங்களின் புத்தகம்)தில்

 1. உணவுக்காகப் பயிரிடப்படும் தாவரம்

2.   பழம் தரும் தாவரம்

3. காட்டுத் தாவரம் என தாவரங்களின் வகைப்பாடு மற்றும் தாவரங்களின் தனிப்பட்ட உருவ அமைப்பை மூன்று குழுக்களாக விளக்கப்பட்டுள்ளது.

மருத்துவ தாவரங்கள் மற்றும் பல பயனுள்ள தாவரங்களின் தகவல்கள் மற்றும் தாவரங்களின் பாலியல் வாழ்க்கை போன்ற பல ஆதாரபூர்வமான தகவல்களை கொண்டிருப்பதால் இந்த புத்தகம் தாவரவியல் பற்றிய ஒரு சிறந்த கலைக்களஞ்சியம் எனலாம். வரலாற்றில் முதல் முறையாக தாவரங்களின் வாழ்க்கை முறையை பற்றி விவரித்தவர் இவரே.

இவர் எழுதிய புத்தகங்களே பின்வரும் மக்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தது.

அபு ஹனிஃபாவால் விவாதிக்கப்பட்ட தாவரங்கள்:

  நறுமண மலர் செடிகள்:[ The aromatic floral plants]

கிராம்பு, மல்லிகை மற்றும் காட்டுரோஜா போன்றவற்றின் பண்புகள், மருத்துவ பயன்கள் மற்றும் நடவு முறைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

  நறுமணமுள்ள புதர்கள் மற்றும் அலங்கார மரங்கள் :[ Fragrant bushes and ornamental trees]

மெரிட்டில் லாரல், ஆமணக்கு எண்ணெய், சிரியாவின் கெட் மீ, வாழைமரம், லாரல் ரோஜா ஆகியவைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

  பழ மரங்கள்:[ Fruit trees]

கிரானேடைன் மரம், வால்நட் மரம், தென்னை மரம், பிஸ்தா மரம், பீச் மரம், பிளம் மரம், அத்திமரம், பேரிக்காய் மரம், மல்பெரி மரம், பைன் மரம், லைசியம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.

  பழம் தரா மரங்கள்:[ Non-fruit trees]

நபேட்டியன் பாப்புலர், ஷாவத், சிட்ரோனெல்லா, மைரர் மரம், ஒலிபன் மரம், மருதாணி, நீல தைலம் மரம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.

  பருப்பு தாவரங்கள் மற்றும் தானியங்கள் :[ Leguminous plants and graminaceae]

கோதுமை மற்றும் பார்லி, அரிசி, பீன் பருப்பு, குஞ்சி பட்டாணி,பருத்தி, கம்பு, எள், ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.

  காய்கறிகள்:[ Vegetables]

சிறிய முள்ளங்கி, கேரட், சிரியா லீக், வெங்காயம், பூண்டு, காலான், கீரை, கொத்தமல்லி, புதினா, முட்டைக்கோஸ் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.

  ஆலிவ் மரம்:[zytun]

  பேரிச்சபழம் மரம்:[ The date-palm]

இவர் நன்கு அறியப்பட்ட தாவரவியலாளராக மட்டுமில்லாமல் பல துறைகளிலும் சிறந்து விளங்கினார், கணிதவியல்,வானியல், விலங்கியல், வரலாற்றாசிரியர், உளவியலாளர், புவியியலாளர், தத்துவவியலாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் இனவியலாளர். கிரேக்க கலாச்சாரத்தில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். தின்வாரி எழுதிய பிற புத்தகங்கள் பின்வருமாறு,

Mathematics and natural sciences:

1.   KITÂB AL-KUSUF (“BOOK OF SOLAR ECLIPSES”)

2.   KITĀB AN-NABĀT YUFADILUH AL-‘ULAMĀ’ FĪ TA’LĪFIH (كتاب النبات يفضله العلماء في تأليفه), ‘PLANTS, VALUED BY SCHOLARS FOR ITS COMPOSITION’

3.   KITĀB AL-ANWĀ (كتاب الانواء) ‘TEMPEST’ (WEATHER)

4.   KITĀB AL-QIBLAH WA’Z-ZAWĀL[N 3] (كتاب القبلة والزوال) “BOOK OF ASTRAL ORIENTATIONS”

5.   KITĀB ḤISĀB AD-DŪR (كتاب حساب الدور), “ARITHMETIC/CALCULATION OF CYCLES”

6.   KITĀB AR-RUD ‘ALĀ RAṢD AL-IṢBHĀNĪ (كتاب الردّ على رصدٌ الاصفهانى) REFUTATION OF LUGHDAH AL-IṢBHĀNĪ

7.   KITĀB AL-BAḤTH FĪ ḤUSĀ AL-HIND (كتاب البحث في حسا الهند), “ANALYSIS OF INDIAN ARITHMETIC”

8.   KITĀB AL-JAM’ WA’L-TAFRĪQ (كتاب الجمع والتفريق); “BOOK OF ARITHMETIC/SUMMATION AND DIFFERENTIATION”

9.   KITĀB AL-JABR WA-L-MUQABILA (كتاب الجبر والمقابلة), “ALGEBRA AND EQUATION”

10. KITĀB NUWĀDR AL-JABR (كتاب نوادرالجبر), “RARE FORMS OF ALGEBRA”

Social sciences and humanities

1.   KITĀB AL-AKHBĀR AL-ṬIWĀL (كتاب الاخبار الطوال), “GENERAL HISTORY” 

2.   KITĀB KABĪR (كتاب كبير) “GREAT BOOK” [IN HISTORY OF SCIENCES]

3.   KITĀB AL-FAṢĀHA (كتاب الفصاحة), “BOOK OF RHETORIC”

4.   KITĀB AL-BULDĀN (كتاب البلدان), “BOOK OF CITIES (REGIONS) (GEOGRAPHY)”

5.   KITĀB ASH-SH’IR WA-SHU’ARĀ’ (كتاب الشعر والشعراء), “POETRY AND THE POETS”

6.   KITĀB AL-WAṢĀYĀ (كتاب الوصايا), COMMANDMENTS (WILLS);

7.   KITĀB MA YULAHAN FĪH AL’ĀMMA (كتاب ما يلحن فيه العامّة), HOW THE POPULACE ERRS IN SPEAKING;

8.   ISLÂH AL-MANTIQ (“IMPROVEMENT OF SPEECH”)

9.   ANSÂB AL-AKRÂD (“ANCESTRY OF THE KURDS”)

அபூ ஹனிபா தின்வாரி தனது இறுதி காலத்தில் தினாவரில் (அதாவது இன்றைய மேற்கு ஈரானில்) இறந்தார். அவரது இறந்த தேதி வெவ்வேறு தினங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மிக சாத்தியமான தேதி 24 ஜூலை,895 ஆகும்.

குறிப்பு:

1.https://en.wikipedia.org/wiki/Abu_Hanifa_Dinawari

2.https://muslimheritage.com/al-dinawari/

3. CONTRIBUTIONS OF MEDIEVAL  ARAB-MUSLIM SCIENTISTS TO BOTANY AND AGRICULTURE

4. https://www.researchgate.net/publication/331344594_Muslim_botanists

5. Le Dictionnaire botanique d’Abu Hanifa al-Dinawari, reconstructed from quotations from later works; cf. al-Dīnawarī, Le Dictionnaire botanique.

எழுத்தாளர் :- அப்துல் பாசித் M.Sc (Plant Biology), நெறியாளர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

Email:- bazsmart105@gmail.com

Related Posts

Leave a Comment