முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைமைகள்

by Mohamed Anas

முஹம்மது நபியவர்கள் மனித வாழ்வு முழுமைக்குமான முன்மாதிரியாவார். அவரது வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களில் மனிதனின் வாழ்வு முறைக்கான பரிபூரண வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் மாணவர்களை சிறந்த மனிதர்களாகவும் சிறந்த பிரஜைகளாகவும் மாற்றுவதற்குத் துணை நிற்கின்ற உன்னதமான கற்பித்தல் முறைமைகளையும் நாம் அவர்களின் ஸுன்னாவிலிருந்து பெறலாம்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் கைக்கொண்ட சிறந்த கற்பித்தல் முறைமைகள் வரலாறு காணாத பெறும் சமூக மாற்றத்தை அந்த ஜாஹிலியா – சமூகத்திற்குள் தோற்றுவித்தது. முறைசார்ந்த கல்வி (Formal Education) என்ற வாசகத்திற்கு உரித்தான கலாநிலையமோ சர்வகலாசாலையோ இல்லாத ஒரு காலப்பகுதியில், அறிவு வீழ்ச்சியும் ஒழக்க வீழ்ச்சியும் மிகவும்; கீழ்மட்டத்திலிருந்த மக்கள் மத்தியிலேயே அவர் தனது தூதை முன்வைத்தார். இத்தகைய சூழ்நிலையில் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு, கற்பித்தல் முறைமைகளை உபயோகித்ததன் விளைவாக, மறுமை நாள்வரை அத்தகைய ஒரு சமுதாயத்தை எவராலும் உருவாக்க முடியாது என்று கூறுமளவுக்கு மனிதப் புனிதர்கள் கொண்ட சீரிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடிந்தது. அத்தோடு அவரது நுட்பமான கற்பித்தல் உத்திகள் தான்; அல்குர்ஆனினதும் சுன்னாவினதும் அறிவுக் கருவூலங்களை பாரெங்கும் பரப்புவதற்குத் துணை நின்றன அறிவியல், தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சாணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ;இன்றைய காலத்திலும் இஸ்லாத்தின் கொள்கைகள் பலவீனமடைந்து போகாமைக்கும் இவை காரணமாக அமைந்தன.

இன்றைய கல்வியியலாளர்கள், கல்விஉளவியலாளர்கள் கோட்பாடுகளாக (concepts) முன்வைக்கின்ற பல்வேறு கற்பித்தல் முறைகளை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியிருப்பதோடு அவர்களது வாழ்க்கையின் முன்மாதிரி என்ற வகையிலும் அவை புனிதத்துவத்தோடு பின்பற்றுவதற்கும்; உரியனவாகும். அவற்றுள் பிரதானமான சிலவற்றை சுருக்கமாக இக்கட்டுரை அலசுகின்றது.

நபியின் பிரதான பணி கற்பித்தல்:

முஹம்மத் (ஸல்) பிரதானமான பணி, தனது சமூகத்தினருக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொடுப்பதோடு அவர்களை நன்மை, சிறந்ததின் பக்கம் வழிகாட்டுவதாகும். இறைதூதரின் பொறுப்புகள் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகி;றது. அவன்தான் எழுத்தறிவில்லாத சமூகத்தார்களின் மத்தியில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதி காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி தீர்க்கமான  அறிவை (சுன்னா) யும் கற்றுக் கொடுக்கின்றார்.(ஸுரா:ஜம்ஆ-2)

இவ்விறை வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

01. அல்லாஹ்வுடைய வேத வாக்கியங்களை அம்மக்களுக்கு ஓதிக் ;காண்பி;க்க வேண்டும்

02. அவர்களை ஒழுக்கரீதியாக சீர்மைப்படுத்தி, பண்படுத்தி புனிதர்களாக மாற்றுதல் வேண்டும்.

03.இறை வேதத்தை (அல்குர்ஆன்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.

04. ‘அல் ஹிக்மா’ வையும் அம்மக்களுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். ‘அல் – ஹிக்மா’ என்பது பெரும்பாலான தப்ஸீர் ஆசிரியர்களின் கருத்துப்படி நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைக் குறிக்கும். எனவே, அவருடைய நடைமுறை வாழ்வியலையும் அவர் அவர்களுக்கு கற்பித்தல் வேண்டும்.

இந்நான்கு பொறுப்புகளும் ‘கற்பித்தல்’ என்ற அம்சத்திற்குள் அடங்கிவிடுவதையும் நாம் அவதானிக்கலாம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் அல்குர்ஆனை ஓதிக் கொண்டும் படித்துக்கொண்டும் இருக்ககும் சந்தர்ப்பத்தில் ‘நான் ஓர் ஆசிரியனாகவே அனுப்பப் பட்டுள்ளேன்’ எனக் கூறினார்கள்

(இப்னு மாஜா – 229)

ஓர் ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்:

வெற்றிகரமாகச் செயற்படும் ஓர் ஆசிரியர்; பெற்றிருக்க வேண்டிய பண்புகளை முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னகத்தே கொண்டிருந்தார்கள் அவரிடம் காணப்பட்ட உயர்ந்த ஒழுக்க மாண்புகளும் ;இதற்கு உறு துணையாக அமைந்தன நபி (ஸல்) அவர்களைப் போன்று வெற்றிகரமான ஆசிரியராகத் தொழிற்பட விரும்புபவர் பின்வரும் அவரது பண்புகளை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

01 – கவனமும் கரிசனையும்

நபி(ஸல்) அவர்களின் இந்தப் பண்பு பற்றி அல்குர்ஆன் கீழ்வருமாறு பிரதாபிக்கின்றது. ஷஷ(விசுவாசிகளே) திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். .நீங்கள் கஷ;டப்படுவது அவருக்கு வருத்தமாக இருக்கும். உங்கள் மீது மிக்க கரிசனை கொண்டவர் அவர் விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர், மிகக் கிருபையுடையவர்’ (சூறதுத் தௌபா 128) அபூதர் (றழி) அவர்களிடம்; இறைதூதர்; (ஸல்) ஒருமுறை கூறினார்கள் ;’அபூதர்ரே   நான் உன்னைப் பலவீனராகக் காண்கிறேன். நிச்சயமாக நான் எனக்கு எதனை விரும்புகின்றேனோ அதனையே உமக்கும் விரும்புகின்றேன்.’ (முஸ்லிம் 1826)

முஸ்லிம் சமூகத்தை சீர்கேட்டிலிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனத்தைப் பற்றி பின்வரும் ஹதீஸ் போதிக்கின்றது, ‘எனக்கும் எனது சமூகத்தினத்தினருக்கும்; உதாரணம் நெருப்பு மூட்டிய ஒரு மனிதனைப் போன்றதாகும். பூச்சிகளும் ஏனைய உயிரினங்களும் அதிலே விழுந்து (உயிரை மாய்த்துக்) கொள்கின்றன.  நீங்கள் அதில் விழுவதற்காக முண்டியடித்துக் கொண்டு போகும் போது உங்களை நான்பிடித்து, தடுத்து நிறுத்துகின்றேன்.’ (முஸ்லிம்  – 2284)

எனவே ஓர்ஆசிரியர் தனது மாணவர்களின் விடயங்களில் அக்கறை காட்டுவதோடு, அவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் அம்சங்களை விட்டு அவர்களைத் தடுத்து அவர்களை நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டும், என்ற வேட்கையோடு பணிபுரிய வேண்டும்.

02 – வழிகாட்டுவதில் மென்மையும் இரக்க சுபாவமும்.

இறைதூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு வழிகாட்டும் போது மிக இரக்கத்தோடு இளகுத் தன்மையோடும் நடந்து கொள்வார்கள்.

அனஸ் பின் மாலிக் (றழி) அவர்களை ‘எனது சிறிய மகனே’ என நபியவர்கள் அழைப்பார்கள் (அஹ்மத் – 12648). இறுதிக் தூதருக்கு பல வருடங்கள் பணிவிடை புரிந்தஅனஸ் பின் மாலிக் (றழி) பின்வருமாறு கூறுகின்றார்கனள். ஷஷஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த ஒழுக்கம் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். ஒருநாள் என்னை ஒரு விடயமாக அனுப்பி வைத்தார்கள் நான் அவர் சொன்ன விடயத்தைச் செய்வதற்குக் போவதாக மனதில் எண்ணிக்கொண்டு நான் போக மாட்டேன்’ எனக் கூறினேன் . பின்னர் சந்தையில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் ஓர் இடத்தைக் கடந்து செல்லும் போது திடீரென நபியவர்கள் என் பின்னாலிருந்து எனது பிடரியைப் பிடித்தார்கள். நான் திரும்பிப் பார்த்த போது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள் அப்போது ‘நான் ஏவிய விடயத்தைச்; செய்வதற்காகப் போகின்றாய் தானே என என்னிடம் கேட்டார்கள் அதற்கு நான் ஆம், அல்லாஹ்வின் தூதரே எனப்; பதிலளித்தேன்.

நபி (ஸல்) அவர்களின் இரக்க சுபாவம் ;ஒவ்வொரு தோழரையும் தான் தான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் மிகச் சிறந்தவன் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. அம்ருப்னுல் ஆஸ் (றழி) பின்வருமாறு கூறுகின்றார்; இறைதூதர் (ஸல்) என்னை நோக்கி முகங்கொடுத்துப் பேசுவார்கள் சமூகத்திலேயே நான் தான் சிறந்தவன் என நான் நினைக்கும் வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.. (திர்மீதி – 295)

அனஸ் பின் மாலிக் (றழி) அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றார்கள் ஷஷஅல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நபியவர்களுக்கு ஒன்பது வருடங்கள் பணிபுரிந்துள்ளேன், நான் ஒன்றைச் செய்ததற்காக ஏன் இதனைச் சய்தீர் என அவர்கள் வினவியது கிடையாது. ஒன்றைச் செய்யாது விட்டதற்காக இப்படிச் செய்திருக்கக் கூடாதா எனக் கேட்டதுவும் கிடையாது. (முஸ்லிம் – 2310) அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனக்கு எந்த ஒரு வார்த்தையாலும் ஏசியது கிடையாது சீ என்று கூட சொன்னதில்லை.(முஸ்லிம் 12622) நபி (ஸல்) அவர்கள் தான் கற்பித்தவர்களுக்கு மாணவர்கள் என்று பயன்படுத்தாமல் தோழர்கள் என்று பிரயோகித்தமை இங்கு கவனிக்கத்தக்கது. ஆசிரியர் தன்னோடு இரக்கமாக இருக்கிறார் என்ற எண்ணம், அவரிடம் எதனையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற தாராள மனப்பான்மை ஆசிரியருடனான நெருங்கிய உறவு மாணவர்களை அதிகம் கற்கத் தூண்டும்.

03 – பணிவு

ஒர்; ஆசிரியர்; அறிவைப் பெற்று அதில் வளர்ச்சி காணும்போது பணிவுஎன்ற பண்பும் அவருடன் சேர்ந்திருக்க்; வேண்டும். மாணவர்களில் பல தரப்பட்ட அறிவு மட்டங்களைக் கொண்டவர்கள் இருப்பார்கள். பலவீனமானவர்கள் விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டப்படல் வேண்டும்.

அபூ ர்pபாஆ (றழி) கீழ்வரும் சம்பவத்தைக் கூறுகின்றார்; நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம்; நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் அவரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே தனது மார்க்கம் எதுஎன்று தெரியாத அறிமுகமில்லாத ஒரு மனிதன் தனது மார்க்கம் பற்றிக் கேட்டு வந்திருக்கின்றான். என்றேன். உட்னே அவர்கள் தனது பிரசங்கத்தை நிறுத்தி விட்டு என்னிடம் வந்தார்கள் இரும்பிலான கால்கள் கொண்டதென்று நான் நினைக்க கூடிய ஒரு கதிரையும் கொண்டு வரப்பட்டது. அதிலே அவர்கள் அமர்ந்து அவருக:கு அல்லாஹ் கற்றுக் கொடுத்ததை எனக்குக் கற்றுத் தர தொடங்கினார்கள் பின்னர் பிரசங்கத்தை மீண்டும். தொடர்ந்து முடிவு செய்தார்கள். (முஸ்லிம் – 876) இதனால் தான் (ஸல்) அவர்கள் அவருக்காக எழுந்து நிற்பதையோ மன்னர்கள் போன்று கௌவரமளிக்கப்படுவதையோ விரும்பவில்லை.

04 – மாணவர்களைப் புரிந்து, அவர்களை இனங்காணல்

நபி (ஸல்) அவர்கள்; தனது தோழர்களின் பெயர்கள், அவர்களின் சிறப்புப் பண்புகள், அவர்களது கோத்திரங்களின் பெயர்கள் அவர்களின் பொருளாதார, சமூக, தனிநபர் விபரங்கள் போன்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்கள். அத்தோடு சிறப்புத்; திறமைகள் கொண்டவர்களை அத் துறையிலேயே ஈடுபடுத்தியமையையும் அவர்களது வரலாற்றில் நாம் காணமுடியும் ஒவ்வொரு நபரோடும் பேசும் போதும் கூட்டாகச் செயற்படுத்தும் போதும் ஒரு செயலில்; ஈடுபடுத்தும் போதும் அவரது தனித் தன்மைகளை பேணியவகையில் அமைந் திருந்தததை அவதானிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் சில ஸஹாபாக்களுக்குச் சூட்டியிருந்த சிறப்புப் பெயர்களும் இதனைப்பிரதிபலிக்கின்றன. அபூ பக்ர் (றழி) அவர்களுடைய ஈமானியப் பலமே அவருக்கு ஸித்தீக் (உண்மைப்படுத்துபவர்) என்றும் உமர் (றழி) அவர்களின் சத்தியத்தின் மீதான உறுதியே அவருக்கு ‘பாரூக்’ (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுபவர்) என்றும், காலித் இப்னு வலீத் (றழி) அவர்களின் வீரமே அவருக்கு ‘ஸைபுல்லாஹ’ (அல்லாஹ்வின் வாள்) என்றும் நபியவர்கள் சிறப்புப்; பெயர்களை முன்வைப்பதற்கு காரணங்களாக அமைந்தன.

இதனை மேலும் வலியுறுத்துவதாக பின்வரும் ஹதீஸ் அமைகின்றது. எனது உம்மத்தில் எனதுஉம்மத்தின் மீது அதிக இரக்கமுடையவர் அபூபக்ர், அல்லாஹ்வின் மார்;க்கத்தின் விடயத்தில் மிகுந்த உறுதியோடு நடந்து கொள்பவர் உமர். உண்மையாக அதிக வெட்க உணர்வுஉடையவர் உஸ்மான், மிகச் சிறந்த தீர்ப்பு வழங்குபவர் அலிஇப்னு அபீதாலிப் அல்லாஹ்வின் வேதத்தை சிறப்பாக ஓதுபவர் உபைஇப்னு கஅப், ஹலால், ஹராம் விடயங்களில் மிகவும் அறிவுடையவர் முஆத் இப்னு ஜாபல், வாரிசுரிமைச் சட்டங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவர் ஸைத் பின் ஸாபித், நிச்சயமாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் நம்பிக்கையாளர் ஒருவர் இருப்பார் இந்த சமூகத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (றழி) ஆவார். (இப்னு மாஜா – 125)

                மாணவர்களின் தனித் திறமைகளையும் ஆர்வத்தையும் கருத்திற் கொண்டு, அவர்களுக்குரிய துறைகள் தீர்மானிக்கப்படல் வேண்டும் என்ற தற்கால கல்விச் சிந்தனையை நபி (ஸல்) அவர்கள் செயற்படுத்திக் காட்டியுள்ளமை இதற்கு சான்று.

நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைமைகள்;

                இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட இறையறிவை தனது தோழர்களுக்கு மத்தியில் பரப்புவதற்கு பல்வேறு கற்பித்தல் முறைமைகளைப் பயன்படுத்தினார்கள் அவர்கள் உபயோகித்த அந்த உத்திகளும் வழிமுறைகளும் சீரிய முறையில் அறிவைப் பரப்பத் துணை நின்றன. அவற்றுள் மிக முக்கியமானவற்றைக் கீழ்வருமாறு தொகுத்துத் தருகின்றோம்:

 01 – மாணவர்களிடம் வினாத் தொடுத்தல்;-

     மாணவர்களின் அறிவு பெறும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும் அவர்களின் கவனத்தை கற்றலின்பால் ஒருமுகப்படுத்துவதற்காகவும், முதலில் அவர்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்பது சிறந்த கற்பித்தல் உத்தியாகக் கருதப்படுகின்றது. இறைதூதர் (ஸல்) அவர்கள் இந்த முறையைப் பல்வேறு இடங்களில் பிரயோகித்துள்ளார்கள்.

 ‘வாங்குரோத்து நிலையை அடைந்தவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?..’ (முஸ்லிம் – 2581)’ புறம் பேசுதல் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?.. (முஸ்லிம் – 2589) இது எத்தகைய (சிறப்புமிக்க) நாள் என்று உங்களுக்குத்  தெரியுமா?   (புகாரி- 1654)

02 – கேள்வி கேட்கத் தூண்டுதல்;-

       இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் கேள்வி கேட்பதை வரவேற்றார்கள் அவர்கள் தொடுக்கும் வினாக்களுக்குரிய தெளிவை வழங்குவதோடு மாத்திரமன்றி அவர்களின் உள்ளத்தில் மேலதிகமாக எஞ்சியிருக்கும் சந்தேகங்களுக்கும் சேர்த்து நபியவர்கள் விளக்கம் தருவார்கள்.

  ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அல்லாஹ்வின் தூதரே நாம் கடலில் பயணம் செய்யும் வேளையில் சிறிதளவு தண்ணீரைக் கொண்டு செல்கின்றோம். நாங்கள் அதனைக் கொண்டு வுழூ செய்தால் எங்களுக்குத் தாகத்தின் போது தண்ணீரில்லாது போய்விடும் அவ்வேளையில் நாம் கடல் நீரைக் கொண்டு வுழூ செய்யலாமா? எனக் கேட்டார். அதற்கு இறைத் தூதர் (ஸல்) ‘அதன் நீர் மிகத் தூய்மையானது அதிலுள்ளவை இறந்தாலும் ஹலாலானது என்று பதில் கூறினார்கள்’ (புகாரி – 69)

   ஹஜ்ஜிக்காக இஹ்ராம் கட்டியவர் எதனை அணிய வேண்டும் என ஒரு மனிதர் நபியவர்களிடம் வினவிய போது அவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டை வாசனைத் திரவியம் அல்லது  குங்குமம் பூசப்பட்ட உடை. (புகாரி – 134, முஸ்லிம் -1177) என மேலதிகமான பல விளக்கங்களையும் முன்வைக்கின்றார்.

03 – தெரியாததைச் சொல்லாது தவிர்த்தல்;-

       நபி (ஸல்) அவர்கள் அல்லாவுடைய வஹியைப் பெற்று அறிவிக்கின்ற இறுதி நபியாக இருந்தும் கூட தனக்குத் தெரியாத விடயத்தைத் தெரியாது எனக் கூறுவதற்கு வெட்கப்படவில்லை.

 நபி அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எனது செல்வத்தில் நான் என்ன செய்யட்டும்? எப்படி செல்வத்தின் கடமைகளை நிறைவேற்றுவது? எனக் கேட்ட போது வாரிசுச்சொத்துப் பற்றிய இறைவசனம் இறங்கும் வரை அவர்கள் எனக்குப் பதிலேதும் சொல்லவில்லை என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (றழி) கூறுகிறார்கள்.

     (புகாரி – 6723, முஸ்லிம் – 1616)

       ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே மோசமான ஊர் எது? எனக் கேட்டார். அதற்கவர்கள் எனது இரட்சகனிடம் கேட்டுச் சொல்லும் வரைஎனக்கு ஏதும் தெரியாது என்றார்கள். ஜிப்ரில் (அலை) அவர்களிடம் வந்தபோது அவரிடம் மோசமான ஊர் எது? என வினவினார்கள் (அஹ்மத் – 16302)

     ஹதீஸ் ஜிப்ரீல் எனப் பிரபல்யமான ஹதிஸிலும், மறுமை நாள் எப்போது வரும்? என ஜிப்ரீல் (அலை) நபியவர்களிடம் வினவ கேள்வி கேட்பவரை விட கேட்கப்படுபவர் இது பற்றி அதிகம் அறிந்தவரில்லை எனப்பதிலிறுத்தார்;

04 – மீட்டி மீட்டிச் சொல்லுதல்;-

   நபி (ஸல்) அவர்கள் அழகாகவும் தெளிவாகவும்; பேசுவார்கள் அவர்களது வார்த்தைகள் தெளிவுமிக்கவையாக அமைந்திருக்கும் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய இடங்களில் சுருக்கமாகச் சொல்வார். தேவையேற்படின் மீட்டி மீட்டிச் சொல்வார்கள் மாணவர்களிடம்; ஆழமாகப்பதிய வைப்பதற்கு இம்முறைமை பயன்படுத்தப் படுகின்றது.

  நபி (ஸல்) அவர்கள் பேசும் போது அதனை எண்ணிப் பார்த்தால் எண்ணிக் கொள்ள முடியுமானதாக அமைந்திருக்கும் என்று ஆயிஷh (றழி) அவர்கள் கூறுகின்றார்கள் (புகாரி – 3567) ‘அவன் நாசமாகிப் போகட்டும் (மூன்றுமுறை) அல்லாஹ்வின் தூதரே அவன் யார்? என வினவப்பட்டது அதற்கவர் யாருக்கு பெற்றோர்களில் ஒருவரோ இருவருமோ வயது முதிர்ந்த நிலையில் கிடைத்து அதன் மூலம் அவர் சுவர்க்கம் போகாதவர் எனப் பதில் கூறினார்கள்’                            (முஸ்லிம் – 3551)

சில “அல்லாஹ்வின் மீது சத்தியமாக” என்ற வாசகத்தையும் இணைத்து மூன்று முறை கூறியுள்ள ஹதீஸ்களையும் நாம் காணலாம்.

05 – உரையாடல், கலந்துரையாடல்;-

  இன்றைய கல்விச் சிந்தனைகளுள் மாணவர் மையக்கல்வி மிகவும் முக்கியமானது அதிலும் மாணவர்களும் கற்றல் செயற்பாடுகளில் ஆசிரியரோடு கலந்துறவாடி (inter active) அறிவுபெறல் பிரதானமான தாகும். இறுதித் தூதர் (ஸல்) இந்த முறைமையை உபயோகித்திருக்கிறார்கள்.

 ஜிப்ரீல் (அலை) மனித உருவில் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்துசில கேள்விகள் கேட்பதும் பின்னர் அதற்குப் பதிலளிப்பதுமாக அமைந்த ஹதீஸு ஜிப்ரீலின் இறுதிப் பகுதியில் இவர் ஜிப்ரீல் உங்களது மார்க்கத்தை உங்களுக்குத் கற்றுக் கொடுப்பதற்காக வந்தார். என வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நபி (ஸல்) அவர்களின் எல்லாக் கட்டங்களிலும் போல கலந்துரையாடல் (ஷ{றா) அமைந்திருந்தததைப் பார்க்கலாம். அவர்களது அரசியல்ஷ, சமய, போர்ச்சூழல், தனிநபர் வாழ்வியல் அனைத்து பகுதிகளிலும் இது செயற்பட்ட முறையை அவரது சரித்திரத்தின் பக்கங்கள் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

06 – உதாரணம் கூறி விளக்குதல்;-

இறுதி நபி (ஸல்) அவர்கள் தமது ஹதீஸ்கள் பலவற்றில் குறிப்பிட்ட விடயத்தை விளக்குவதற்கு உதாரணங்களை முன் வைத்துள்ளமையைக் காணலாம். மாணவர்கள் தெளிவாக  விளங்கிக் கொள்வதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் இம்முறைமை உதவுகின்றது.

 முஃமினை ஈச்சமரத்துக்கும் (புகாரி – 61) சமூகத்தை கப்பலுக்கும் (புகாரி – 2540) தீய பண்பு கொண்ட நண்பனை கரி ஊதும் கொல்லனுக்கும் (புகாரி-5214) ஒப்பிட்டு வந்துள்ள ஹதீஸ்களை இதற்கு சான்றாகக் கூறலாம்.

07 – காட்சிப்படுத்தல்;-

 ஒரு விடயத்தை விளக்க முனையும் போது அங்க அசைவுகளாலேயோ அல்லது குறிப்பிட்ட பொருட்களை நேரடியாக எடுத்துக் காட்டுவதினூடாகவோ மாணவர்கள் உள்ளங்களில் நன்கு பதிப்பிக்க முடியும் நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறையில் இதனையும்; நாம்; அவதானிக்கலாம் தற்காலத்தில் கல்வியியலாளர்கள் மிகவும் வலியுறுத்திச் சொல்லும் ஒரு முறைமையாக இது காணப்படுகின்றது. உதாரணமாக யானை என்பதை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி, எழுதிக் காட்டலாம். வரைந்து காட்டலாம், அதன் படத்தைக் காட்டலாம். அதனை நேரடியாகக் காட்டலாம் இவற்றுள் நான்காவது முறையே மாணவர்களுக்கு சிறப்பானதுவும் தாக்கம் விளைவிக்க கூடியதும்  (Effective) ஆகும்.

ரசூல்லாஹ் (ஸல்) அவர்கள் நானும் அநாதையை ஆதரிப்பரும் சுவர்க்கத்தில் இவ்வாறிருப்போம் என தனது சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள்                                                                                  (புகாரி, முஸ்லிம்)

ரசூல் (ஸல்) அவர்கள் தனது இடது கையில் பட்டையும் வலது கையில் தங்கத்தையும் எடுத்து, கைகளை உயர்த்திக் காட்டி இவை இரண்டும்; எனது சமூகத்தின் ஆண்களுக்கு ஹராமானவை பெண்களுக்கு ஹலாலாவை என்றார்கள்.

(அபூ தாவூத், நாஸாயி, இப்னு மாஜா, அல்ஜாமி உஸ் ஸகீர் – 2274)

08 – செயற்படுத்திக் காட்டல்;-

மாணவர்கள் எப்போதும் செயற்பாட்டு மாதிரியை (Model) விரும்புவார்கள் அறிவைப் பெறுவதற்குரிய பலம்பொருந்திய ஒரு முறையாக இது இன்று கையாளப்படுகின்றது. உண்மையில்; நபி (ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதும் ஒரு செயற்பாட்டு மாதிரியேயாகும். எவ்வாறு அமுல்படுத்துவது என்பதற்குரிய நடைமுறை ரீதியான வழிமுறைகளை இறைதூதர் (ஸல்) அவர்கள் செயற்படுத்திக் காட்டினார்கள் அதுவே சுன்னா என்ற அமைப்பில் முஸ்லிம் சமூகத்தால் கௌரவமாக மதித்துச் செயற்படுத்துகின்ற அவர்களின் வாழ்வுமுறையாக அமைந் துள்ளது. குறிப்பாக சிலஅடிப்படைக் கடமைகளில் வெளிப்படையாகவே இக்கருத்தை நபியவர்கள் தெளிவுப்படுத்தி யுள்ளார்கள். ‘நான் எவ்வாறு தொழுவதை நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ (புகாரி) ‘ஹஜ்ஜினுடைய கிரியைகளை நீங்கள் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் – (முஸ்லிம்)

09 – செயற்பட வைத்தல்;-

 இன்றைய கல்விச் சிந்தனைகளில் செயற்பாட்டு அறிவை (Practical knowledge) வளர்த்தல் முக்கிய விடயமாகக் கருதப்படுக

 நபி (ஸல்) அவர்கள் இத்துறையில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள் இஸ்லாம் வெறுமனே ஒருகோட்பாடாக மாத்திரம் இருந்து விடாமல் மனித வாழ்வில் செயற்படுத்த முடியுமான ஒரு மார்க்கமாக அது மாற வேண்டும் என்பதில் இறுதி நபி (ஸல்) கவனமாக இருந்தார்கள் அதனால் அல்லாஹ்வினதும் அவனதுதூதரினதும் கட்டளைகளும் போதனைகளும்; ஸஹாபாக்களின் வாழ்வில் அரங்கேறின.

 நபி (ஸல்) ஒரு மனிதனை மூன்று முறை மீட்டி மீட்டித் தொழச் செய்தார்கள் அம்மனிதன் இறுதியில் அல்லாஹ்வின் தூதரே எனக்குத் கற்றுத் தாருங்கள் என்று கூறினான்.

10 – தவறு செய்பவர்கள், குறைவிடுபவர் களோடு நடந்து கொள்ளும் முறை;-

மாணவர்கள் மத்தியில் அறிவுமட்டத்தில் குறைபாடுள்ளவர்கள் உளவியல் பாதிப்புக் குள்ளானவர்கள் சோம்பலினால் தவறு விடுபவர்கள் என பலதரப்பட்டவர்கள் இருக்க முடியும் இத்தகையவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

ஆயிஷh (றழி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: அறப் போராட்டங்களின் போதன்றி வேறு எந்த வேளையிலும் அல்லாஹ்வின் தூதர் தனது கரத்தால் ஒரு பெண்ணுக்கோ பணியாளருக்கோ எதற்கும் அடித்ததுகிடையாது      (முஸ்லிம் – 2328)

 கஃப் இப்னு மாலிக் தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாது பின்வாங்கிய போது, நபி (ஸல்) அவர்கள் யுத்தத்திலிருந்து திரும்பி வந்ததும் கஃப் அவரைச் சந்தித்த வேளை என்ன நடந்தது என்பதை அவரே கூறுகின்றார். ‘நான் அவர்களிடம் சென்றபோது அவர்கள் கோபத்துடன் புன்முறுவல் பூத்தார்கள்’

(புகாரி – 4156)

 நபி (ஸல்) அவர்கள் தனது பள்ளிவாசலில் இருந்த போது ஒரு நாட்டுப்புற அறபி அங்கு வந்து, பள்ளிவாசலுக்குள் சிறுநீர்க்கழிக்கத் தொடங்கினார். அவரது தோழர்கள் நிறுத்து, நிறுத்து என்றார்கள். இறைதூதர் (ஸல்) அவர்கள் அவரை விடுங்கள் என்றார்கள் அவர் சிறுநீர் கழித்து முடியுமட்டும் ஸஹாபாக்கள் பேசாதிருந்தார்கள் அந்த சிறு நீரின் மீது தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றும்படி தனது தோழர்களுக்குப் பணித்துவிட்டு, அந்த நாட்டுப்புற அறபியை அருகில் அழைத்து இப்படியான பள்ளிவாசல்கள் சிறுநீர் அசுத்தங்களுக்குரிய இடங்களன்று இவை அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்கும் தொழுவதற்கும் அல்குர்ஆன் ஓதுவதற்கும் .. உரிய இடங்களாகும். என இங்கிதமாக எடுத்தியம்பினார்கள்       (முஸ்லிம் – 285)

ஓர் இளைஞன் நபியவர்களிடம் தனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதி தருமாறு கேட்டான், நபித் தோழர்கள் அவரை அச்சுறுத்தினார்கள் உடனே இறுதி நபி (ஸல்) அவர்கள் அவனை நோக்கி நெருங்கி வரச் சொன்னார்கள் அவனும் சிறிது நெருங்கி வரவே அவர்களுடன் கூட அமரச் சொன்னார்கள் அமர்ந்ததும் நீ விபச்சாரத்தை உனது தாயாருடன் விரும்புவாயா? எனக் கேட்க அல்லாஹ்வின் மீது ஆணையாக இல்லை என்றான் உனது புதல்வியுடன் விரும்புவாயா? எனக் கேட்டார்.. பின்னர் அல்;லாஹ்வே இவரது பாவத்தை மன்னிப்பாயாக, உள்ளத்தை தூய்மை படுத்துவாயாக கற்பை உறுதிப்படுத்துவாயாக எனவும் பிரார்த்தித்தார்கள் (அஹ்மத் – 21708)

எனவே மிகவும் நிதானமான அன்னியோன்யமான வழிமுறைகள் மூலமே குறைவிடுபவர்கள், தவறிழைப்பவர்கள் சீர்செய்யப் பட்டார்கள் என்பதை இவற்றிலிருந்து புரியலாம்.

முடிவுரை:

முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டியா வார்கள் அந்த வகையில் கல்வித் துறைக்கும் அவர்களது வழிகாட்டல்கள் மிகவும் சிறப்புடையன அவை இறைவழிகாட்டல்கள் மூலம் பெறப்பட்டவை அமுல்படுத்தி, பரீட்சிக்கப்பட்டு வெற்றியளித்தவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் இத்தகைய முறைமைகளை நடை முறைப்படுத்துவது சுன்னாவைப் பின்பற்று வதுவுமாகும். அதனால் உலகில் அபிவிருத்தி உண்டாவதோடு மறுமையிலும் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

எழுத்தாளர்:-
As Sheikh S.M.M. Mazahir (Naleemi), B.A.(Hons), M.phil
Seniour Lecturer,
Dept of Islamic studies,
South Eastern University – Oluvil

Related Posts

Leave a Comment