இஸ்லாமிய உயிரியல் & சுற்றுச்சூழல் கல்வி – Video

by Mohamed Anas

அம்மாபட்டினம் அன்னை கதீஜா கல்லூரியில் இஸ்லாமிய கல்வி அறிவியல் – இரண்டு நாள் பயிலரங்கம்

ஆலிமாக்களுக்கான “இஸ்லாமிய கல்வி அறிவியல்” (ISLAMIC ACADEMICAL SCIENCES) என்ற தலைப்பில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 26,27-02-2022 ஆகிய இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.

முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி என்ற தளத்தில் நின்று சிந்திக்கும் பணியாற்றும் யாரும், இஸ்லாமிய அறிவுத் துறையை அதன் மரபு வழியில் மீள்கட்டமைப்பு செய்யும் முயற்சிகளுக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள். இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய எல்லா அறிஞர்களும் தலைவர்களும் அதைத்தான் செய்துள்ளனர்.

இஸ்லாமிய அறிவுத் துறையால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை வாழ்வியலை இலக்குடையதாக தரம் உயர்த்தி, அதை உலக மக்களுக்கு ஈர்ப்புடையதாகவும் முன்னிறுத்த முடியும்.

இஸ்லாமிய கல்வி அறிவியலின் அடிப்படை இயல்களில் (உஸூல்) ஞானமுள்ள பெண் அறிஞர்கள் சமுதாயத்தில் பெருகினால் அடுத்தடுத்த தலைமுறையின் இஸ்லாமிய அறிவு மிகவும் விசாலமானதாக இருக்கும்.

நடைபெற்ற இரண்டு நாள் பயிலரங்கில் அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் அதன் இலக்கண முறைப்படி ஆழமாக புரிந்து அணுகுவதற்கான அடிப்படைப் பாடங்களை (உஸூல்) தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் பயிற்றுவித்தனர்.

இஸ்லாமிய உயிரியல் & சுற்றுச்சூழல் கல்வி தலைப்பில் மேலப்பாளையம் TIME School லின் இஸ்லாமியத் துறை தலைவர் மௌலவி முஹம்மது மீரான் தாவூதி சிறப்பாக உரையாற்றினார்கள்.

Related Posts