அபுல் ஹசன் அஹ்மத் இப்னு இப்ராஹீம் அல் உகுல்திசி இவரது இயற்பெயர். துருக்கியின் தமாஸ்கஸ் நகரத்தை சேர்ந்தவர், பெரும்பாலான தமது வாழ்க்கையை பக்தாதில் கழித்தவர். கணித மேதைகள் என வர்ணிக்கப்படுவோரில் இவருக்கும் ஒரு முதலிடம் உண்டு.
கிதாபல் ஃபுசுல் ஃபியல் ஹிசாப் அல்ஹிந்தி என்ற தமது கணித நூலில் அராபிய எண் வடிவத்தையும் இந்திய எண் வடிவத்தையும் இணைத்து தெசிமல் பிராக்ஷன்ஸ் ஐ (Decimal Fractions) நிறுவியவர். தெசிமல் என்பது பதின்மம். பதின்ம எண்களை பின்னமாக மாற்றி , ஈவு நீக்கிய (Deletions ) இல்லாத கணிதங்களுக்கான சமன்பாடுகளை உருவாக்கியவர். இந்த முறை இப்போது வரை கணிதத்தில் இருந்து வருகிறது.
ஐந்து வரிசை, ஏழு வரிசை,பன்னிரு வரிசை மற்றும் பதினைந்து வரிசை என எத்தனை வகையாக பின்னங்களை பிரித்தாலும் பதின்ம வரிசை கொண்டு பத்து பத்தாக எண்களை வகுக்கும் இந்த எளிய முறையை உருவாக்கிய இச்சமன்பாடுகள் அரித்மெடிக் ஆஃப் அல்உகுல்திசி என்றே இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
கிபி.954 ஆண்டுவாக்கில் வாழ்ந்து வந்த இவரை பற்றிய அதிக விபரங்கள் இல்லை. ஆனாலும் இவரது புத்தகம் இன்றளவும் பாதுக்காப்படுகிறது. இந்த புத்தக நகல்கள் தேவைக்கேற்ப இன்றும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவரது பெயரை தெளிவாக அரபியில் எழுதியுள்ள அவர் நான் திமிஷ்க் (தமாஸ்கஸ்) எனவும் எழுதியுள்ளார்.
பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஜம்சித் அல்காஷி (மித்ஃபா அல் ஹிசாப் எனும் நூலில் ) எனும் கணிதவியலாளர் தாம் தான் பதின்ம பின்னங்களை முதலில் உருவாக்கியதாக கூறிவந்த நிலையில் , அல்காஷிக்கு முன்மாகவே அதாவது ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே அல்உகுல்திசி பதின்ம வகை பின்னத்தை உருவாக்கிவிட்டதாக J. லெனாட் பெர்கிரன் எனும் ஆய்வாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அல்உகுல்திசி உருவாக்கிய பதின்ம பின்னங்கள் பின்னாளில் காகித எழுத்து பயன்பாட்டிற்கும் , கால்குலேட்டர் மற்றும் கணினி பயன்பாட்டிற்கும் உதவும் என அவரால் உணர்ந்திருக்க முடியும். நினைத்து பார்த்தால் படிக்கும் குழந்தைகளுக்கு பதின்ம பின்னம் எனும் முறை இல்லாதிருந்தால் எந்த கணிதமும் யாருக்கும் புரியாமல் போயிருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது.
கணினியின் தாய் என வர்ணிக்கப்படும் கால்குலேட்டரை வடிவமைத்தவருக்கு உச்சாத்துணையாக இருந்தது உகுல்திசி வடிவமைத்த இந்திய எண்கணித எண்ணிக்கை தான். அப்போது இந்திய கணித எண்கள் அரபு கணிதவியலாளர்களால் தான் மேலும் மெருகேற்றப்பட்டு முழுமைபடுத்தப்பட்டது.
கணித விதிகளுக்கு பேனாவையும் , எழுது தாளையும் முதன்முதலாக பயன்படுத்தியவரும் இவரே. இவர் உருவாக்கிய Dust Board எனும் விளையாட்டு குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலும் அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமடைந்து வந்த்து. அந்த காலகட்டத்தில் சிறுவர்களுக்கான Mind Games என்பது அப்போதுவரை யாராலும் வடிவமைக்கப்படவில்லை.
அல்உகுல்திசியின் பிறப்பும் இறப்பும் அவரது குடும்ப விபரங்கள் எதுவும் தெரியவில்லை என்றாலும், பனிரண்டு நூற்றாண்டுகளை கடந்தும் அவரது கணித முறைகள் நம்மிடையே நீங்காமல் வாழ்கிறது.
பத்தாம் நூற்றாண்டிற்கு முன்புவரை இல்லாத அளவிற்கு மூன்று வகையிலான எண்கணித முறைகள் கையாளப்பட்டன. முதலாவதாக அதில் இடம்பிடித்தது விரல் குறியீட்டு எண்கணிதம் ( Finger Reckoning arithmetic) இது இஸ்லாமியர்களது வழிபாட்டு முறையில் ஒன்றான தஸ்பீஹ் எனப்படும் இறைவனின் பெயரை உச்சரித்து எண்ணிக்கை செய்யும் முறை. இதில் பத்து விரல்களை கொண்டு சுமார் 9,000 எண்கள் வரை எண்ணிவிடமுடியும். 16ம் நூற்றாண்டு வரை இம்முறை பயன்பாட்டில் இருந்துள்ளது.
இரண்டாவது முறை – அறுபதுபின்ன எண்ணிக்கை ( Sexagesimal system) பண்டைய பாபிலோனியர்களின் அறுபது அறுபதாக எண்ணும் முறை. பொதுவாக வணிகர்களின் எண்ணிக்கை முறை இதுவாக இருந்தது. மூன்றாவதாக எழுத்துக்களால் எழுதப்பட்ட எண் முறை. இதற்கு குறிப்பாக பெயர் எதுவும் கொடுக்கப்படவில்லை. அரபியர்கள் எண்களுக்கு வடிவம் கொடுத்தது இதன் சிறப்பாக கூறப்படுகிறது.
மேற்கூறிய எண்கணித விதிகளை வணிகம்,வரி வசூலிப்பு, நில அளவை மற்றும் நுகர்பொருள் விற்பனை என அனைத்திற்குமாக முறைமை படுத்தியது அராபியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)