எதிர்பின்ன எண்களை கண்டறிந்த கணித மேதை அப்துல் வஃபா அல்’புஜ்னி (940-988)

by Mohamed Anas

திரிகோண கணிதத்தின் (Spherical Trigonometry)  மேம்படுத்தலுக்கு அளப்பெரும் பங்களிப்புச் செய்தவராவார்.

இரானின் கொரொசான் பள்ளத்தாக்கின் ஸாம் பகுதியின் சிறு கிராமமான புஜ்னியில் கிபி. 940ல்  ஜூன் 10ம் நாள் பிறந்த இவரது பெற்றோர் மற்றும் விபரங்கள் பெரிதாக எதுவும் கிடைக்காதபட்சத்தில் பக்தாதின் பியூத் அரசவையில் இவருக்கு கணிதமேதை எனும் அந்தஸ்த்து இருந்தது.

இவரது சமகாலத்து இஸ்லாமிய விஞ்ஞானிகளாக உடன் பணியாற்றிய அபுசஹ்ல் அல்குஹி மற்றும் அல்’ஸிஜ்ஜி இருந்தனர். மேலும் அபுநஸ்ர் அல் இராகி, அபுமஹ்மூத் கொஜாந்தி, குஷார் இப்னு லபான் மற்றும் அல்பிரூணி ஆகியோரும் பக்தாதின் கைத்துல் ஹிக்மாவில் இவருடன் ஆசிரியப்பணி செந்தவராவர்.

தம்முடைய பத்தொன்பதாவது வயதிலேயே அதாவது 959 ல் பக்தாதை அடைந்த அவர் 998ல் இறக்கும் வரை அங்கேயே நாற்பது வருடமும் தங்கிவிட்டார். கணிதத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பு மற்றாரை விடவும் தற்கால நவீன கணித விதிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது மட்டுமல்லாமல் அவர் வகுத்த நேர்கோண திரிகோணமிதி விதிகள் இன்று வரையிலும் வேறு யாராலும் மாற்று மேம்பாடு செய்யப்படவில்லை.

கிபி 997ல் அவர் உருவாக்கிய தூரத்தில் இடையிலான நேர அளவு தற்போதைய  தூரம் மற்றும் நேரத்தின் அளவை மிகவும் ஒத்ததாக உள்ளது. அவர் பக்தாதில் இருந்தபடியே அல்பிருணி இருந்த தற்போது உஸ்பெக்கின் காத் நகரின் நேரத்தை இரண்டு நீள்வேட்டு ரேகையை ( longitude ) கணக்கிட்டு அறிவித்தார். இரண்டு நகரங்களுக்குமிடையில் தோராயமாக ஒரு மணிநேரம் இடைவெளி இருப்பதை அறிந்து வெளியிட்டார்.இந்த ஆராய்ச்சியை இதற்கு முன் வேறு யாரும் கணக்கிடவில்லை.

அபுசஹ்ல் அல்குஹி என்பவருடன் சேர்ந்து அல்’புஜ்னி தயாரித்த வானவியல் கருவிகள் பின்னாளைய விஞ்ஞானிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  அல்’புஜ்னி இயற்றிய வானநூல் ( Almagest)  சாஸ்திரத்தின் பெரும்பகுதி காணாமல் போய்விட்டது. எனினும் அதில் ஏழு பகுதிகள் மட்டும் கிதாப்’அல்’மஜித்ட்ஸி எனும் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அல்’புஜ்னியின் பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படுவது கணிதத்தில் ஒரு அங்கமாக கருதப்படும் Graphs வரைவதற்கான எதிர்பின்ன எண்களை கண்டறிந்தது மற்றும் உலகில் எத்திசையில் இருந்தாலும் திரிகோணமிதி விதிகளின்படி மக்கா இருக்கும் திசையான கிப்லாவை கண்டுபிடிப்பதும் தான். Spherical Triangle வரைபடங்களுக்கான Laws of Sines ஐ வடிவமைத்ததும் இவரே.

இவருடைய புத்தகங்கள் :

*கிதாப் அல் மஜித்ஸி
*ஸிஜ் அல் வாதி
*கிதாப் அல் ஹந்தாசியா ( கட்டிடக்கலையில் ஹெப்டகன் எனப்படும் எழுங்கோண வடிவமைப்பை உருவாக்கியது)
*கிதாப் அல் உம்மல் ஹிசாப் – கணித சாஸ்திரம்
* கிரேக்க கணித மேதைகளான டியோபன்டஸ் மற்றும் யூக்ளிட்ஸ் ஆகியோரின் அரித்மடிக் புத்தகங்களை மொழிப்பெயர்த்தார்.

இவருடைய கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக நிலவின் ஒரு மேட்டிற்கு அல்’வஃபா என பெயர் பெற்றுள்ளது. இவருடைய புத்தகங்களில் இவருடைய குடும்ப விலாசமாக – முஹம்மது இப்னு யஹ்யா இப்னு இஸ்மாயில் இப்னு அல்’அப்பாஸ் அல்’புஜ்னி என்கிற குறிப்பு உள்ளது.

எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)

Related Posts