இசை சிகிச்சை (Music Therapy)

by Mohamed Anas

மனப் பிறழ்வு (Mental Disorder) மன அழுத்தம் (Mental Stress) மனச் சிதைவு (Schizophrenia) போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள்  மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு இசை அல்லது விருப்பமான பாடல்கள் கேட்பதின் மூலம் அவர்களின் சிந்தனைகளை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிறது இன்றைய நவீன மருத்துவ உலகம்.

மேலும்  மனதின் வலிகளில் இருந்தும் வேதனைகளில் இருந்தும் கொஞ்சமாக கொஞ்சமாக வெளியே வருவதற்கு மனதை வருடும் இசையும் பாடல்களும் துணை செய்கின்றன என்பதும் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆன ஒன்றாக  இருக்கிறது.

இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் மருத்துவர்களாக திகழ்ந்த  இமாம் அல் ராஸி (854–932) இமாம் இபின் ஸீனா (980–1037) போன்ற மருத்துவ மேதைகள் மனப் பிறழ்வு, நரம்பு தளர்ச்சி, உயர் இரத்த அழுத்தம் போன்ற  நோய்களுக்கு இசை கேட்பதை சிகிச்சையாக (Music Therapy)  அளித்துள்ளனர்.

அதேபோல எகிப்தின் மன்னர் காலாவூன் (கி.பி.1284) ஆட்சியில் (இமாம் இப்னு தைமிய்யா காலம்)  கெய்ரோவில்  அமைந்திருந்த அல் மன்சூரி மருத்துமனையில் மன நோயாளிகளுக்கு இசை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக துருக்கி உதுமானிய கிலாஃபத்தில் சூஃபி இசை மரபு மூலம் உளவியல் நோய்களுக்கு இசை  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்று வரை அது தொடர்கிறது.

துருக்கி பொது மருத்துவமனைகளில் கூட நோயாளிகளை உளவியல் பாதிப்புகளில் இருந்து மீட்க இசை சிகிச்சை (Turkey Music Therapy) அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலுள்ள மனநல சிகிச்சை மருத்துவமனைகளிலும் இசை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

எழுத்தாளர் :- CMN Saleem

Related Posts