முஸ்லிம் கல்வியின் ஆரம்பம் அல்குர்ஆனை ஓதுவதிலும் அதை மனனம் செய்வதிலும் தான் துவங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை குர்ஆனை ஓத கற்றுத்தருவதும் ஆர்வமுள்ளவர்களுக்கு மனனம் செய்ய பயிற்சியளிப்பதும் தான் முஸ்லிம் குழந்தை வளர்ப்பின் துவக்கமும் கல்வியின் முதன்மை இலக்குமாக இருந்தது.
அன்றைய முஸ்லிம்கள் திருமண வயதிற்குள் குர்ஆனை மனனம் செய்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஓதி முடித்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
குர்ஆன் நன்றாக ஓத தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம் குடும்பத்தின் மணமகளுக்கான தகுதியாக இருந்தது.
பரிதாபம் இன்று முதலாளித்துவத்தின் பட்டப்படிப்புகள் மணப்பெண்ணுக்கான தகுதியாக மாறிவிட்டது.
திருமணத்திற்கு முன்பாக தங்களது சந்ததிகளுக்கு கடத்த வேண்டிய முதன்மையான அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பதில் அன்று உறுதியாக இருந்தனர்.
முஸ்லிம்களின் உயர்வான இந்த கலாச்சாரத்திற்கு தயானை குறித்த இன்றைய உயிரியல் ஆய்வுகள் வலிமை சேர்த்து வருகின்றன.
பல தலைமுறையின் பதிவுகள் தயானை (DNA) வழியாக சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்ற உயிரியல் ஆய்வுகள் பல செய்திகளை நாம் அறிந்து கொள்வதற்கும் சிலவற்றை யூகிப்பதின் மூலம் பல உண்மைகளை உணர்ந்து கொள்வதற்கும் வழிவகுக்கிறது.
திருமணமாகி இல்லற வாழ்வில் ஈடுபடும் ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைகின்றபோது இருவரின் தாயனையும் கலக்கின்றன.
இந்த தாயனை கலப்பில் தான் தம்பதிகள் அதுநாள்வரை பெற்றிருந்த கல்வியறிவு சிந்தனைத்திறன் இயல்பு குணங்கள் வாழ்க்கைமுறை என அனைத்தும் பதிவாகி அந்த பிள்ளையை நேர்த்தியாக வடிவமைக்கிறது.
குறிப்பிட்ட தம்பதியரின் சிந்தனை பதிவுகள் மட்டுமல்ல அவர்களுடைய மூதாதையரின் அறிவு ஆற்றல் சிந்தனைகள் உருவ அமைப்புகள் உள்ளிட்டவையும் அந்தப் பிள்ளையை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதனடிப்படையில் குர்ஆனை மனனம் செய்த ஒரு தம்பதிக்கு பிறக்கும் பிள்ளைகளின் தாயானையில் குர்ஆன் ஓசைகள் நினைவுகளாக பதிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மழலைப் பருவத்தில் தாயிடமிருந்து அந்தப்பிள்ளை குர்ஆனை ஓத கற்றுக்கொள்கின்ற போது அது பழக்கப்பட்ட வார்த்தைகளாக பிள்ளைகள் நிச்சயம் உணரும்.
மிகச் சிறிய வயதில் குர்ஆனை மனனம் செய்வதற்கு இது துணை செய்கிறது.இதன் காரணமாகத் தான் இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த அறிஞர்கள் அதிகமானோர் 12 வயதிற்குள் குர்ஆனை மனனம் செய்து முடித்தனர்.
சிலர் 7 அல்லது 8 வயதிலேயே முழு குர்ஆனையும் மனனம் செய்த செய்திகளையும் படிக்கின்றேம். இப்படி சிறுவயதிலேயே இந்த சாதனைகள் செய்வதற்கு தாயானை எப்படி உதவுகின்றன என்பதை இன்றைய உயிரியல் ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
திருமண வாழ்விற்கு போவதற்குள் தங்களது சந்ததிகளுக்கு கடத்த வேண்டிய அறிவுச் செல்வங்களை தமது சிந்தனையில் வைத்துள்ளோமா என்பதை இன்றைய இளம்தலைமுறை சிந்திக்க வேண்டும்.
தங்களது பிள்ளைகளுக்கு அதுபோல பயிற்றுவிக்கின்றோமா என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
– CMN SALEEM