துருக்கிக்கு பொருளுதவி செய்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்

by Mohamed Anas

1912  இல் துருக்கி உதுமானிய அரசுக்கும் பால்கன் லீக் நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. போர் செலவினங்களுக்காக உலக முஸ்லிம்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அன்றும் கூட வறுமையில் வாடிய ரோஹிங்கிய முஸ்லிம் விவசாயிகள் ரங்கூனில் இருந்த உதுமானிய அரசின் தூதரகத்திற்கு சென்று 800 லிராஸ் வழங்கினார்கள்.போர் முடிந்து நிவாரணப் பணிகளுக்காக மீண்டும் கோரிக்கை வைத்தபோது ஏறக்குறைய 3000 லிரஸ் அளித்தனர்.

துருக்கியில் உதுமானிய அரசின் ஆட்சிமுறை முடிவுக்கு வந்து குடியரசு முறை ஏற்பட்டு  90 ஆண்டுகள் கடந்தப் பிறகும் கூட……

ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மிய ராணுவத்தால் துரத்தப்பட்ட போது துருக்கி அதிபர் எர்துகானின் மனைவி எம்னி அவர்கள் நேரடியாக சென்று  அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.” வறுமையிலும் எங்களுக்கு உதவிய மக்கள் இவர்கள்”  என்று ஜனாதிபதி எர்துகான் குறிப்பிட்டார்.

பர்மிய அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தியதில்  துருக்கியின் பங்கு மகத்தானது.

1914 இல் உதுமானிய அரசின் ஹிஜாஸ் ரயில்வே திட்டத்திற்கு அதிகமான நிதியுதவி அளித்தது இந்திய முஸ்லிம்கள் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது. அதில் நிச்சயம் தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகமாக இருந்திருக்கும் ஆனால் ஆவணம் இல்லை.

வரலாறு முக்கியம்.

அதைவிட முக்கியம் வரலாற்றை ஆவணப்படுத்துவது

-CMN Saleem

Related Posts