இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்களில் பாடமாக இடம்பெறுவதற்கு இந்த பாடலைத் தாண்டிய தகுதி உலகில் வேறெதற்குமில்லை.
இந்த சொற்களை செதுக்கிய கவிஞருக்கும் அதற்கு தனது உணர்ச்சிகளால் உயிர்கொடுத்த நாகூர் E.M.ஹனிஃபா அண்ணனுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக…..
முஸ்லிம்களின் அறிவியல் ஆராய்ச்சிப்பணிகள் அனைத்தையும் துவங்குவதற்கான மூல கோட்பாடு இந்த பாடல் வரிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
———————————————-
அல்லாஹு அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
அல்லாஹு அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
இல்லை உலகில் வேறு இன்பம்
உன்னை அல்லால் யாவும் துன்பம்
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
அல்லாஹு அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
காணும்இடம் எங்கணுமே
காட்சிதரும் உன்செய்கை…..
காணும்இடம் எங்கணுமே
காட்சிதரும் உன்செய்கை
காலநிலை சுழலுவதும்
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
அல்லாஹு அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
அலைகடலும் சூரியனும்
அருமைக்காற்றும் பெருமழையும்
மிக அருமைக்காற்றும் பெருமழையும்….
அலைகடலும் சூரியனும்
மிக அருமைக்காற்றும் பெருமழையும்
மிக அருமைக்காற்றும் பெருமழையும்
இரவு நேரத்திலே வானில்
அலையும் விண்மின் கூட்டங்களும்….
இரவு நேரத்திலே வானில்
அலையும் விண்மின் கூட்டங்களும்
எல்லையில்லா உந்தன் புகழை
என்றும் சொல்லும் உண்மை இதுதான்
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
அல்லாஹு அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
தாயின் வயிற்றில் சேய்தனை காத்து
தங்கிடும் உனது பேரன்பை….
தாயின் வயிற்றில் சேய்தனை காத்து
தங்கிடும் உனது பேரன்பை
வாயினாலே கூறிடவே ஒரு
நாவுபோதாதி ங்கே உண்மை
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
அல்லாஹு அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
எல்லாம் உன்செயல் அல்லாஹு
-CMN Saleem