திருமணமான முஸ்லிம் பெண்கள் சிலர் கணவன் துணையுடன் யுடியூப் சேனல் நடத்துகின்றனர்.அவற்றில் பெரும்பாலும் சமையல் வீடியோக்களாகவே இருக்கின்றன.
கல்வியறிவு மேம்பட்டு வரும் இன்றைய சூழலில் இதை கொஞ்சம் மேம்படுத்தினால் சமூகத்திற்கு பயனுள்ளதாகவும், பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடி நடத்துபவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
அமைப்புகள் சார்ந்த வழக்கமான மார்க்க சொற்பொழிவுகளாக இல்லாமல் இறையுணர்வை அதிகரிக்கும் சிறிய சிறிய உரைகளை நிகழ்த்துங்கள்.
உறவுகளைப் பேசுங்கள்.ஊர்களின் வரலாற்றுப் பெருமைகளை பேசுங்கள். ஊரின் வேளாண்மை மற்றும் உற்பத்தி பொருட்களை பேசுங்கள்.கிராமிய வாழ்க்கை முறைகளை பதிவிடலாம்.சாதிமத வேறுபாடில்லாமல் பெண் சாதனையாளர்களை அறிமுகம் செய்யலாம்.
பெண்களாக சேர்ந்து இலக்கிய மன்றங்களை நடத்தலாம். பாரம்பரிய உணவுப் பதார்த்தங்கள், வைத்திய முறைகள், நாட்டுப்புறப் பாடல்கள்,பெருநாள் விழாக்கள் என்று…..
மார்க்க வரம்புக்குட்பட்டு வரும் அறிவுசார் நிகழ்ச்சிகளை தரமாக தொகுத்து வெளியிடுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
கேரள முஸ்லிம்கள் இதில் முன்னோடிகளாக இருக்கின்றனர்.
சீரியல்களிலும் முகநூலிலும் முடங்கிவிடாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மனச்சுமை குறைந்து அறிவு வளர்ச்சிக்கும் அது வழிவகை செய்யும்.
– CMN SALEEM