முஸ்லிம் சமுதாயத்திற்கான உயர்கல்வி வழிகாட்டுதலில் ” என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்” என்பதை மாற்றி ” என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும்” என்ற என்ற தனித்துவமான வார்த்தையை முன்னிறுத்த வேண்டும்.
சொந்த சமூகத்திற்கு, மனிதகுலத்திற்கு, உயிரினங்களுக்கு, இந்த பூமிக்கு என்று முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய அறிவுசார் பொறுப்புகள் மலையளவு குவிந்து கிடக்கின்றன.
அதை இந்த உம்மத்தின் இளையத் தலைமுறைக்கு நினைவுபடுத்துவது தான் கல்வி மற்றும் சமூக ஊழியர்களின் முதன்மையான பொறுப்பு.
உயர்கல்வி (Higher Education) என்ற வார்த்தையை மாற்றி ஆராய்ச்சிக்கல்வி (Research Education) என்ற மேம்பட்ட வார்த்தையை வீடுகளில் பயன்படுத்த வேண்டும்.
” எம்புள்ள காலேஜுக்கு படிக்கப்போகுது” என்பதைவிட ” எம்புள்ள ஆராய்ச்சி செய்யப் போகுது” என்ற அல்குர்ஆன் முன்னிறுத்தும் செறிவான வார்த்தை, முஸ்லிம் சமூகத்தின் சமூகப் பொருளாதார அரசியல் சூழலை வெகுவிரைவாக மாற்றி அமைக்கும்.
-CMN Saleem