பனிப்பிரதேச அணில்கள் பனிக்காலம் முழுவதும் தங்களது நிலத்தடி வங்குகளில் முழு உறக்கத்திற்கு சென்றுவிடுகின்றன.
பனிக்காலத்தில் உணவு கிடைக்காது என்பதால் இந்த அணில்கள் எட்டுமாத உறக்கத்திற்கு செல்கின்றன. இந்த காலகட்டத்தில் மொத்தம் 12 நாட்கள் மட்டுமே உறக்கம் கலைந்து காணப்படும். உறக்க காலத்தில் அவற்றின் இருதயம் நிமிடத்துக்கு ஒன்று என்ற அளவிலேயே துடிக்கும். எட்டுமாத உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்காக பனிக்காலத்திற்கு முன் தனது உடல் எடையை இரண்டு மடங்காக கூட்டிக் கொள்ளும். அதன் மூலம் குளிர்காலத்தில் தனது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தியை கொழுப்புவடிவில் தனது தோலுக்கு அடியில் இருக்கும் திசுக்களில் சேமித்து வைத்துக் கொள்கிறது. பனி உறக்க காலத்தில் இந்த அணில்களின் உடலில் வளர்சிதை மாற்றம் மிக மிக குறைவாகவே நிகழ்கிறது. எனவே அதன் உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு மிக மிக குறைவேகவே செலவும் ஆகிறது.
பனி உறக்கம் எப்படி துவங்கப்படுகிறது?
அசைவற்ற முழு உறக்கத்திற்கு செல்லும் முன்னர் அவற்றின் மூளை முதலில் குளிரூட்டப்பட்டுவிடுகிறது.
அவ்வாறு மூளை சூடு தனிந்தவுடன் அவை எந்த ஒரு செயல்பற்றிய தூண்டுதலும் இல்லாமல் உடனடியாக உறக்கத்திற்கு சென்றுவிடுகின்றன. அதற்கு மேற்கொண்டு அவற்றின் உடல் அசைவது முழுமையாக நின்றுவிடுகிறது.
இதனால் அவற்றின் மூளை சிந்திக்க காரணமான நரம்பணுக்களின் (நியூரான்களின்) பாய்ச்சல் விகிதம் குறைக்கப்படுகிறது. நரம்பணுக்கள் (நியூரான்) பாய்ச்சல் தடைபட்டு மூளையில் மின் தூண்டல்கள் முழுமையாகவே அடங்கினால்தான் முயல்கள் அசைவற்ற உறக்க நிலையில் இருக்க முடியும்.
இந்த அசைவற்ற நிலை அவற்றின் இரத்தம் உரையாமல் இருப்பதற்கான முதற்காரணம். (மனிதர்களுக்கு இப்படி நரம்பணுக்கள் (நியூரான்கள்) தொடர்பற்றுபோகும் நிலை அல்சைமர்ஸ் நோய் எனப்படுகிறது). அடுத்து அனில்களது இரத்தத்தின் வேதியியல் காரணியும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த அணில்கள் உரைபனி காலத்தில் தங்கள் இரத்தம் உரையாமல் இருப்பதற்கான வேதியியல் காரணிகளை பனி மூலக்கூறுகள் (ஐஸ் நியூக்ளியேட்டர்) களை தங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து அகற்றி வாழ தங்களை வடிவமைத்துக் கொண்டுள்ளன.
பனி மூலக்கூறுகள் (ஐஸ் நியூக்ளியேட்டர்கள்) இருந்தால் என்ன நிகழும்?
வெப்பநிலை 0°C க்கும் கீழே செல்லும்போது உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. தண்ணீர் பனியாகா உரையும்போது விரிவடையும் தன்மையுடையது.
ஒரு விலங்கின் உயிர்மூலக்கூறில் உள்ள தண்ணீர் உரையும்போது அவற்றில் உருவாகும் பனிப்படிகங்கள் அந்த மூலக்கூறுகளை துளைத்து சிதரடித்து மரணத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு உயிர் மூலக்கூறுகளினுள் இருக்கும் நீர் மூலக்கூறுகள் விரிவடையாமல் உரைவதற்கு ஒருவகை புரதம் சிலவகை மீன்களில் சுரக்கும். ஆனால் அந்த புரதம் இந்த அணில்களின் உடலில் உற்பத்தி ஆவதில்லை. எனவேதான் இந்த அணில்கள் பனிக்கால உறக்கத்திற்கு செல்லும் முன் தனது இரத்தத்தில் உள்ள பனி மூலக்கூறு அமில மூலக்கூறுகளை முன்கூட்டியே நீக்கிவிடுகிறது.
வெள்ளரிக்காய் சோதனை:-
உங்கள் வீட்டு சமையல்கூட குளிபதன பெட்டியின் பனிகட்டி அமைவு பகுதியில் பசுமையான வெள்ளரிக்காய் ஒன்றை வையுங்கள். ஒரு சில மணி நேரத்தில் அதன் மீது பனிபடரும். அது அந்த வெள்ளரியின் தோலை ஊடுருவி உள்ளே இருக்கும் திசுக்களையும் உரையவைத்துவிடும். ஒருநாள் கழித்து அந்த வெள்ளரியை வெளியே எடுத்து வையுங்கள். அப்போது அதன் மீது படிந்துள்ள பனி உருகி அதன் மேல்தோல் பிளக்கும்.
பிறகு அதனுள் இருக்கும் திசுக்களின் மூலக்கூறுகளும் தனித்தனியாக பிளவுற்று பனி நீரில் கலந்து கசியும். அது கெட்டுப்போயிருக்கும். இந்த வெள்ளிரியில் பனி மூலக்கூறுகள் (ஐஸ் நியூகளேட்டர்கள்) இருந்ததால்தான் பனியின் குளிர்ச்சி அதனுள்ளும் பரவி ஒட்டுமொத்த வெள்ளரியின் உயர்பண்பையும் கட்டுடைத்துவிடுகிறது.
பனி மூலக்கூறுகள் (ஐஸ் நியூக்ளியேட்டர்கள்) எப்படி நீரை பனிக்கட்டி ஆக்குகின்றன?
ஒரு கண்ணாடி பாட்டிலில் நாம் பருகும் மிகவும் தெளிந்த நீரை நிரப்பி உரைந்துபோகும் அளவிற்கு குளிரவையுங்கள். பனிக்கட்டியாக மாறுவதற்கு முன் வெளியே எடுத்து அசையாமல் மேசையில் வையுங்கள். அந்த பாட்டிலினுள் தூசு துகள் போன நீயூக்ளஸ் மூலக்கூறுகள் எதுவும் இல்லை. அந்த பாட்டில் அசைவற்றிருக்கும் வரைதான் அந்த நீர் உரையாமல் இருக்கும். அதை சற்றே அசைத்தால் போதும் அதில் அந்த நீரில் உறுவாகும் காற்றுக்குமிளிகள் ஐஸ் நியூக்ளியேட்டர்களாக மாறி சில நொடிகளிலேயே நீரை உரையவைத்துவங்கிவிடும்.
அதாவது நாம் அசைக்கும் போது அந்த நீரில் உள்ள பனி மூலக்கூறுகள் (ஐஸ் நியூக்ளேட்டர்) மூலக்கூறு ஒன்று தனது குளிர்ச்சியை தனக்கு அருகில் உள்ள மற்றொன்றின் மீது மாற்றும்போது அந்த இரண்டாவது மூலக்கூறு உரையத்துவங்கும். அதன் உரைகுளிர் மற்றொன்றின் மீது….மற்றொன்றின் மீது என்று ஒரு தொடர் நிகழ்வாக மாறி உடனடியாக பாட்டிலில் இருக்கும் நீர் முழுவதையும் உரைய வைத்துவிடும்.
இப்படி ஒரு உரைவு அந்த முயலின் இரத்தத்தில் நிகழ்ந்தால் அது இறந்துவிடும். அப்படி உரைவதற்கு காரணமான பனி மூலக்கூறுகள்
(நியூக்ளேட்டர்களை) தங்களது இரத்தத்தில் இருந்து முற்றாக அகற்றி வாழும் திறனை அவை பெற்றுள்ளன. அவற்றின் உடல் வெப்பம் −2.9 °C (26.8 °F) என்ற அளவிற்கு தாழ்கிறது.
இந்த அணில்களின் இரத்தத்தில் பனி மூலக்கூறுகள் இல்லை. ஆனால் இவை வழக்கம்போல் துள்ளிக்குதித்தால் இரத்தத்தின் குழுங்களால் அணிலின் இரத்த நாளங்களில் பனி மூலக்கூறுகள் போன்ற சூழல் ஏற்பட்டு இரத்தம் உடன் உரைந்துவிடும். அப்படி ஒரு திடீர் குழுங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக அணிலின் மூளை முதலில் குளிவிக்கப்பட்டு அணில் தன்னை முழு அசைவற்ற நிலைக்கு கொண்டுசென்று விடுகிறது.
குளிர்காலம் முற்றுப்பெற்ற வெதுவெதுப்பு நிலை ஏற்படத்துவங்கியவுடன் இந்த அணில்கள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடும்.
பனிக்காலம் முடிந்து முதல் நாள் சூரியக் கதிர்கள் வெப்பத்தை பனியில் படரவிட்டவுடன் பனிப்பரப்பில் ஒரு வகை விரிசல் ஏற்படும். இந்த விரிசல் போலவே பனி உரக்கத்தில் இருக்கும் அணில்களின் தோலில் ஒரு வகை இழுவிசையும் வெப்பமும் நிகழும். இது அணில்களின் உடலில் ஒரு வகை மின் தூண்டலை உருவாக்கும். அது அணிலின் இதயத்தையும் நுரையீரலையும் ஒருசேர மறுபடியும் இயக்கத்துவங்கிவிடும்.
மனிதர்களின் விசயத்தில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை கருப்பையில் இருந்து வெளியுலகிற்கு நுழையும் போதும் இப்படித்தான் தாயின் கருப்பையின் உள் வெப்பத்திற்கும் வெளியுலக வெப்பத்திற்கும் இடையில் உள்ள வெப்ப வேறுபாட்டின் மூலம் குழந்தையின் இதயம் மின்னூட்டம் பெற்று தனது முதல் துடிப்பை துவங்கி வைக்கிறது.
குளிர்காலம் முடிந்தவுடன் ஆண் அணில்கள் தான் முதலில் உறக்கம் கலைந்து வெளிவரும்.
குளிர்கால முடிவில் அணில் எவ்வாறு தங்களை பழைய நிலைக்கு கொண்டுவந்து கொள்கின்றன என்று அறிவது அல்சைமர் நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படும். அதேபோல அறுவை சிகிச்சைகளின்போது உடலுறுப்புகள் பாழ்படாமல் வைத்துக் கொள்ளவும் உதவும் என்று கூறுகின்றனர்.
-கோவை இயற்கை நலவாழ்வகம்