கிபி 536ம் ஆண்டு வரலாற்று காலகட்டத்தில் மனித இனம் சந்தித்த மோசமான ஆண்டு என இந்த ஆண்டு கூறப்படுகிறது. காரணம் என்ன?

by Mohamed Anas

கிபி 536…இந்தோனேசியாவில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையேயுள்ள கிரகடோவா எனும் எரிமலை வெடிக்கிறது. சுமார் 3000 கிமி தள்ளி இருந்த ஆபிரிக்காவில் எல்லாம் அந்த வெடிப்பு சத்தம் கேட்டதாக பதிவாகியிருக்கிறது. 20 கோடி அணுகுண்டுகளுக்கு சமமான வெடிப்பு அது. பலகோடி டன் சல்பர் வெளீயானது. எரிமலை தூசு காற்றை விட மிக லேசானது என்பதாலும் பல ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு அது தள்ளபட்டதாலும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சூரியன் சந்திரனை போல மங்கலாக தெரிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

உலகெங்கும் அடுத்த இரு ஆண்டுகள் மழை பொய்த்தது. வேளாண்மை நடக்கவில்லை. எங்கும் பசி, பட்டினி, பஞ்சம்

இதனால் நிலத்தில் மறைந்து கிடந்த எலிகள் வெளியே வந்தன. அவை வழக்கமான தான் பிறந்த இடத்தை விட்டு அதிக தூரம் போகாது. ஆனால் இப்போது பசிக்கொடுமையால் நிறைய தூரம் போக ஆரம்பித்தன. வடகிழக்கு இந்தியாவில் இருந்த ஒரு எலியிடம் இருந்த பிளேக் நோய் மற்ற எலிகளிடம் பரவியது. பட்டுபாதை கப்பல்கள் வழியாக ரோமானிய சாம்ராஜ்யத்துக்கு பிளேக்நோய் பரவியது. ஆப்பிரிக்கா, யெமென், எகிப்து வழியாக கான்ஸ்டான்டிநோபிள், ஐரோப்பாவை அடைந்தது.

ஜஸ்டினியன் பிளேக் என அன்று ரோமை ஆண்ட மன்னர் பெயரால் அழைக்கபட்ட இந்த பிளேக் நோய் ஏன் வருகிறது, எதனால் வருகிறது என யாருக்கும் தெரியவில்லை. உடலெங்கும் கட்டி, கட்டியாக வரும். செத்து விழுவார்கள்.

அன்றைய ரோமானிய பேரரசின் 50% மக்கள் பிளேக் நோயால் கொல்லபட்டதாக தெரிகிறது. ரோம் மட்டுமல்ல, ரோமானியர்கள் சென்ற இடமெல்லாம் பிளேக் பரவியது. அன்று எந்த சுகாதாரம், தடுப்பூசி எதுவும் இல்லை. பிளேக் ஏன் வருகிறது எனவும் தெரியவில்லை. அதனால் பிளேக் கோரதாண்டவம் ஆடியது. ரோமானியர்களுடன் தொடர்பில் இருந்த செல்டிக் ப்ரிட்டன் முழுக்க துடைத்தெறியப்ப்ட்டது. கிராமம், கிராமமாக மக்கள் செத்து விழுந்தார்கள். ஜெர்மனியில் இருந்த ஆங்கிலோ- சாக்சன் மக்கள் ப்ரிட்டனில் சென்று அந்த கிராமங்களில் குடியேறியதால் ப்ரிட்டன் ஆங்கிலம் பேசும் நாடானது

இந்தியாவில் அந்த சமயத்தில் ரோமுடன் தொடர்பில் இருந்த நாடுகள் இரண்டு. ஒன்று வடநாட்டை ஆண்ட குப்த பேரரசு. கிழக்கு கடற்கரை, குஜராத் வழியே ரோமுடன் தொடர்பில் இருந்தார்கள். ரோமானிய பேரரசுடன் இருந்த வணிக தொடர்புதான் இந்தியாவின் செல்வவளத்துக்கே காரணம்.

தமிழகத்தில் பாண்டியர், சேரர்…

இங்கே இதன் விளைவுகள் என்ன?

கிபி 540க்கு பிறகு குப்த பேரரசு திடீர் என நலிவுற்று வீழ்கிறது. வடக்கே இருந்து மிகிரகுலன் எனும் வெள்ளை ஹூணன் (ஸ்வேத ஹூணர் என வடமொழியில் அழைக்கப்ட்டனர்) தெற்கே க்வாலியர் வரை படைஎடுத்து வந்தான். ஒட்டுமொத்த வட இந்திய அரசர்கள் அனைவரும் கூட்டணி போட்டுதான் அவனை தோற்கடிக்க முடிந்தது.

அவனை பிடித்தும் குப்த அரசனின் தாய் மரணதன்டனைக்கு எதிரானவர் என்பதால் அவனை கொல்லவேண்டாம் என மன்றாடி அவனை மன்னித்து அனுப்ப, அவன் அதன்பின் திருந்தாமல் மீண்டும் படை எடுத்தான். மிக கஷ்டபட்டுதான் அவனை விரட்ட முடிந்தது. அவனது வம்சாவளியினர்தான் ராஜஸ்தானியர்.

தமிழகத்திலும் ரோமானிய வணிகம் பெருத்த அடி வாங்கியிருக்கவேண்டும். பிளேக் தாண்டவமாடி இருக்கவேண்டும். மழையின்மை, வரட்சி, பட்டினிசாவுகள், பிளேக் வந்து பெரும் எண்ணிக்கையில் மரணங்கள் என்ற நிலையில் மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்பது யூகிக்ககூடியதே.

கடவுள் பக்தி அதிகரித்திருக்கும். மழைக்க்க்கும், கொள்ளைநோய்க்கும் ஏராளமான ஆலயங்கள் கட்டபட்டு இருக்கும். சங்கம் மறுவிய காலத்துக்கு பின் பக்தி இயக்கங்கள் தோன்றி சைவம், வைணவம் செழித்த காலகட்டமும் இதுதான். 540களில் பல்லவன் சிம்மவர்மனும், அவன் மகன் சிம்மவிஷ்ணுவும் காஞ்சிக்கு தெற்கே படைஎடுத்து பல்லவ சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார்கள். 570ல் அப்பர் பிறக்கிறார். பல்லவ மகேந்திரவர்மனை அவர் கன்வர்ட் செய்ய, பாண்டியனை சம்பந்தர் கன்வர்ட் செய்கிறார்

திடீர் என பல்லவர் வலுப்பெற, பக்தி இயக்கம் தோன்ற இதுதான் காரணம் என சொல்லமுடியாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழகத்தின் ஜஸ்டினியன் பிளேக், ரோமானிய சம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் குறித்து தரவுகள் உள்ளனவா என பார்க்கவேண்டும்

நன்றி:- நியாண்டர் செல்வன்

Related Posts

Leave a Comment